அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்

சென்னை, செப்.29-
அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் சி, டி. பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்ந்த துறைகளில் சி மற்றும் டி பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத ஊக்கத் தொகை சேர்த்து மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படுகிறது. சி பிரிவில் இளநிலை உதவியாளர்களில் தொடங்கி சூப்பிரண்டு வரை உள்ளனர். டி பிரிவில் அலுவலக உதவியாளர் (ஓ.ஏ.) வாட்ச்மேன் போன்றோர் வருகின்றனர். இந்த இரு பிரிவிலும் மொத்தம் 50 ஆயிரம் பேர் வரை பணியாற்றுகிறார்கள். அவரவர் அடிப்படை சம்பளத்தை பொறுத்து போனஸ் கிடைக்கும். இதற்கான அரசாணையை தமிழக அரசின் நிதித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.
Post a Comment