புதுக்கோட்டையில் சுனாமி வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்: இயக்குனர் அபூர்வா உத்தரவு புதுக்கோட்டையில் சுனாமி வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்: இயக்குனர் அபூர்வா உத்தரவு

புதுக்கோட்டை, செப். 29-
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உலக வங்கி உதவியுடன் அவசர கால சுனாமி மறு கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் ராஜீவ் காந்தி புனரமைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மேற்கானும் திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டும் திட்டங்களில் பணி முன்னேற்றம் குறித்த கூட்டத்தில் கட்டிட ஒப்பந்தகாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். சுனாமி வீடுகள் கட்டும் பணிகளை தரமான முறையில் மேற்கொண்டு வருகின்ற 30ந் தேதிக்குள் முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென திட்ட இயக்குனர் அபூர்வா அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் பொறியியல் வல்லுநர் சுரேந்தர் பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சக்திவேல், சுனாமி திட்ட செயற் பொறியாளர் நாகையன், உதவி செயற் பொறியாளர்கள் ராஜேந்திரன், சாகுல் அமீது, புஷ்பராஜ், தங்கராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment