அதிக மின் தேவைக்கு அணுசக்தி மூலமே நிரந்தர தீர்வு: அணு விஞ்ஞானிகள் சங்க தலைவர் டி.ஜி. ஸ்ரீனிவாசன் அதிக மின் தேவைக்கு அணுசக்தி மூலமே நிரந்தர தீர்வு: அணு விஞ்ஞானிகள் சங்க தலைவர் டி.ஜி. ஸ்ரீனிவாசன்

கருப்பூர், செப். 29-
சேலம் பெரியார் பல்கலைக் கழக வேதியியல் துறை சார்பில் அணு மின் நிலையங்களில் கதிரியக்க தனிமங்களின் பயன்கள் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்தினை அணு விஞ்ஞானிகள் சங்கத்தின் தென் மண்டல தலைவர் டி.ஜி. சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுச் சூழல் மாறுபாடு காரணமாக காற்றின் ஈரப்பதம் நாளுக்கு நாள் மாறி வருகிறது.இதனால் கடல் நீர்மட்டம் படிப்படியாக உயரும் அபாயம் நிலவுகிறது. இதற்கான தீர்வு குறித்து அறி வியலாளர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். பெட்ரோல், நிலக்கரி மற்றும் எண்ணை ஆகிய பொருள்கள் கையிருப்பின்றி முற்றிலும் தீர்ந்து போகும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும்.
இதுபோன்ற நிலையில் வாகனப் போக்கு வரத்து தொடங்கி அன்றாட சிறிய சிறிய நடவடிக்கைகள் கூட முடங்கும் நிலை உருவாகும். அப்போது ஹைட்ரஜனை மூலப்பொருளாக இயங்கும் வாகனங்கள் தயாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்த முடியும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தீர்வினை அணுசக்தி மூலம் மட்டுமே உருவாக்க முடியும்.
காற்றாலைகள் மூலம் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும். சூரிய ஒளியைக் கொண்டு பகலில் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதோடு அதற்கான கட்டமைப்பு உருவாக்குவதற்கு பெரும் செலவு பிடிக்கும் சூழ்நிலை தற்போது உள்ளது. அணுமின் நிலையங்களில் கிடைக்கும் கழிவுகளுக்கு இணையாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் போதும் கழிவுகள் ஏற்படும்.
ஆபத்து என்பது எல்லா வகை மின் உற்பத்தியிலும் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை போதிய கண்காணிப்புடன் செயல்படுத்தி வரும்போது நிச்சயம் பலன் கிடைக்கும். கல்பாக்கம் அணுமின் நிலையம் பல்வேறு ஆண்டு களாக நல்ல முறையில் இயங்கி வரும் நிலையில் கதிர் வீச்சு போன்று எந்தவித பாதிப்பும் அங்கிருக்கும் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களுடன் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஏற்பட வில்லை.
2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும்போது அணு சக்தி பயன்படுத்தலில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். பயிலரங்கத்தில் பதி வாளர் கே. அங்கமுத்து, வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் வி. ராஜ், ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.ராஜவேல், உதவி பேராசிரியர் லலிதா மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment