திருமங்கலம்: பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் பறிப்பு வாலிபர் ஓட்டம் திருமங்கலம்: பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் பறிப்பு வாலிபர் ஓட்டம்

திருமங்கலம், செப். 29-
மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் மாரியம்மாள், இவரது மகள் முருகேஸ்வரி. இவருக்கு திருமணமாகி விருதுநகரில் குடியிருந்து வருகிறார். நேற்று மாரியம்மாள் தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் முருகேஸ்வரியிடம் ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கிவிட்டு பஸ்சில் ஊருக்கு வந்தார். அவருடன் முருகேஸ்வரியும் வந்தார்.
முருகேஸ்வரி ரூ. 40 ஆயிரம் பணத்தை பையில் வைத்திருந்தார். திருமங்கலம் பஸ் நிலையத்தில் பஸ் வந்ததும் தாய்-மகளும் கீழே இறங்கி பெரியார் பஸ் நிலையம் செல்லும் பஸ்சில் ஏற முயன்றனர். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென்று முருகேஸ்வரி கையில் வைத்திருந்த பணப்பையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார்.
இது குறித்து அவர் திருமங்கலம் டவுண் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை பறித்துவிட்டு ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
Post a Comment