News Update :
Powered by Blogger.

இந்தியாவை காக்க மோடி பிரதமராக வரவேண்டும்

Penulis : Tamil on Monday, 29 July 2013 | 18:24

Monday, 29 July 2013

சாத்தான்குளம் ஒன்றிய
இந்து முன்னணி சார்பில்
இந்து முன்னணி மாநாடு நடந்தது.
மேலசாத்தான்குளம் முத்தாரம்மன் கோவில்
வளாகத்தில் நடந்த மாநாட்டிற்கு மாநில
தலைவர் டாக்டர்
அரசு ராஜா தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட
துணை தலைவர்கள் சுந்தரவேல்,
பொன்.பரமேஸ்வரன், மாவட்ட
செயற்குழு உறுப்பினர்கள் சின்னத்துரை,
சுடலைமுத்து, பொன்கந்தசாமி,
தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு, ஒன்றிய
தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர்கள்
பாலகிருஷ்ணன், பொன்பாண்டி, ஒன்றிய
செயற்குழு உறுப்பினர் மலையாண்டி, நகர
தலைவர் சரவண மயில் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். மாநாட்டில் மாநில
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
ராமகோபாலன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:–
இந்திய எல்லையில் சீனா வாலாட்டுகிறது.
ஆனால் நமது பிரதமர் கண்டனம் மட்டும்
செய்கிறார்.
அதனை சீனா கண்டுகொள்ளவில்லை.
அதனை நம்மால் தடுக்க முடியும். அந்த
தடுக்கும் சக்தி தான் நரேந்திரமோடி. இவர்
நாட்டில் பிரதமராக வரத்தான் போகிறார்.
மோடி போன்ற இரும்பு மனிதர் பிரதமராக
வரவேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும்
என மக்கள் விரும்புகிறார்கள்.
இன்று கடவுளே கிடையாது என்பவர்கள்
திருப்பதி, பழனி கோவில்களில்
திருட்டுத்தனமாக
சாமி கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு மிகப்பெரிய எதிரி தீண்டாமை,
சாதி சண்டை தான். இதனை ஒடுக்க நாம்
ஒன்றுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் மாநில தலைவர் டாக்டர்
அரசுராஜா, மாநில துணை தலைவர்
வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்
செயலாளர் சக்திவேல் உள்பட பலர் பேசினர்.
முன்னதாக புளியடி மாரியம்மன் கோவிலில்
இருந்து இந்து முன்னணியினர் ஊர்வலமாக
வந்தனர். ஊர்வலத்தை மாநில
துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார்
கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் இந்து மாணவ–
மாணவிகளுக்கும்
கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என
கோஷம் எழுப்பினர்.

comments | | Read More...

இளவரசன் மரணம் திவ்யாவை மீட்க கோரி கொடுத்த மனு தள்ளுபடி

Penulis : Tamil on Friday, 26 July 2013 | 03:57

Friday, 26 July 2013

தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடந்த நவம்பர் 7–ந் தேதி கலவரம் நடந்தது. இதில் பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பலர் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே திவ்யா தாயார் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து திவ்யா கடத்தப்பட்டிருப்பதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் சுந்தரேஸ் முன்பு கடந்த 3–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான திவ்யா தனது தாயாருடன் செல்வதாக கூறினார். இந்த நிலையில் மறுநாள் இளவரசன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேன்மொழியின் வக்கீல் ரூபட்பர்னபாஸ் ஆஜராகி, இளவரசன் இறந்து விட்டதால் தற்போது திவ்யா தயாருடன் வசித்து வருகிறார். எனவே, நாங்கள் தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்றார்.
அப்போது இளவரசன் வக்கீல் ரஜினிகாந்த் கூறுகையில், இளவரசன் மரணம் உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்து விட்டதால் இவற்றையும் கோர்ட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இரு தரப்பு கருத்துக்களை கேட்ட நீதிபதிகள் திவ்யாவை மீட்க கோரி தேன்மொழி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
comments | | Read More...

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்

Penulis : Tamil on Thursday, 25 July 2013 | 23:15

Thursday, 25 July 2013


இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.


ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் பாராட்டும்படி அமைந்தது. கேப்டன் கோலியின் சதமும், அறிமுக வீரர் அம்பத்தி ராயுடுவின் அரைசதமும் வெற்றியை சுலபமாக்கியது.

ஹராரே மைதானத்தில் பொதுவாக காலைப்பொழுதில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபடும். அதாவது பந்து நன்கு பவுன்சும், ஸ்விங்கும் ஆகும். இதனால் தான், இரண்டு அணியின் கேப்டன்களும் இங்கு விளையாடும் போது டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டனர். அதாவது டாஸ் வெல்லும் அணி சந்தேகத்திற்கு இடமின்றி முதலில் பந்து வீச்சை தான் தேர்வு செய்யும். கடைசியாக இங்கு நடந்த 15 ஆட்டங்களில் 12-ல் இரண்டாவது பேட் செய்த அணியே வெற்றி கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் அனேகமாக இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது. இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் நமது இளம் படை ஆயத்தமாக இருக்கிறது.

ஜிம்பாப்வே முதல் ஆட்டத்தில் 50 ஓவர்களை முழுமையாக சமாளித்ததே பெரிய விஷயம். சிகந்தர் ராசா (82 ரன்), சிகும்புரா (43 ரன்) தவிர வேறு யாரும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. ஆனால் இந்த முறை துரிதமாக ரன்கள் எடுக்க முயற்சிப்பார்கள். அதே சமயம் எந்த காரணத்தை கொண்டும் ஜிம்பாப்வேயை சாதாரணமாக கருதக்கூடாது என்பதில் இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, உனட்கட், ஷமி அகமது, வினய்குமார்.

ஜிம்பாப்வே: சிபாண்டா, சிகந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், மசகட்சா, பிரன்டன் டெய்லர் (கேப்டன்), மால்கம் வாலர், சிகும்புரா, முதோம்போட்சி, உத்செயா, ஜார்விஸ், சதரா அல்லது பிரையன் விடோரி.

இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் டென் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இந்திய வீரர் 27 வயதான அம்பத்தி ராயுடு, ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்தார். தனது முதல் ஆட்டத்திலேயே 63 ரன்கள் விளாசி அசத்திய அவர், இறுதியில் வெற்றிக்கான ரன்னையும் அடித்து பிரமாதப்படுத்தினார். இதன் மூலம் அறிமுக ஒரு நாள் போட்டியிலேயே அரைசதம் அடித்த 11-வது இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

வெற்றிக்கு பிறகு ஆந்திராவைச் சேர்ந்த அம்பத்தி ராயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

அறிமுக போட்டியிலேயே சிறப்பாக ஆடியது அற்புதமான உணர்வை தருகிறது. இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும். இந்திய அணிக்காக என்றாவது ஒரு நாள் விளையாடுவேன் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு. இப்போது அது நனவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இது எனது முதல் சர்வதேச போட்டி என்பதற்காக நான் அதிகமாக பதற்றமடையவில்லை. ஆனால் அதை விட மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு நாள் கிரிக்கெட்டில், இப்போது உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி விளங்குகிறார். அவருடன் இணைந்து விளையாடியது சிறப்பான விஷயம். அவர் விளையாடிய விதம் களத்தில் எனது நெருக்கடியை குறைத்து, எளிதாக ஆட உதவியது. இந்த இன்னிங்சில் அவர் எப்படி நிலைத்து நின்று ஆடினார் என்பதை உன்னிப்பாக கவனித்தேன். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு கிடைத்த நல்ல அனுபவம் இதுவாகும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினேன். அப்போது சச்சின் தெண்டுல்கரும், அந்த அணியின் பயிற்சியாளர் ராபின்சிங்கும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி, உதவிகரமாக இருந்தனர். இந்த தருணத்தில் அவர்களுக்கும், எனது குடும்பத்தினர், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராயுடு கூறினார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) போட்டியில் விளையாடியவர் அம்பத்தி ராயுடு. முதலில், ஐ.சி.எல்.-ல் விளையாடிய வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. பிறகு அந்த போட்டியில் விளையாடிய அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு வழங்கி ஏற்றுக் கொண்டது. ஐ.சி.எல். போட்டியில் பங்கேற்ற வீரர்களில் ஒருவர், இந்திய அணிக்காக களம் இறங்கியது இது தான் முதல் முறையாகும்.
comments | | Read More...

இளவரசன் உடல் மறுபிரேத பரிசோதனை அறிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் திவ்யா என்ற பெண்ணை இளவரசன் என்ற வாலிபர் காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் கலவரம் வெடித்தது. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சேர்ந்து வாழ்ந்த இந்த இளம் தம்பதி, துரதிர்ஷ்டவசமாக பிரிய நேரிட்டது. மனைவி பிரிந்து சென்ற சில நாட்களில் இளவரசன் தர்மபுரியில் ரெயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார்.


அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையில், இளவரசன் தலையில் அடிப்பட்டதால் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று இளவரசனின் நண்பர் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து டெல்லி எய்ஸ்ம் மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர், இளவரசனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி எய்ம்ஸ் டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை செய்தபின்னர், இளவரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களின் மறுபிரேத பரிசோதனை அறிக்கை இளவரசனின் தந்தையிடம் வழங்கப்பட்டது. தர்மபுரி நீதிமன்றம் வழங்கிய அந்த அறிக்கையில், இளவரசனின் தலையில் மிகப்பெரிய காயம் ஏறப்டடதால் மரணம் ஏற்பட்டிருக்கிறது. ரெயில் மோதியதால் இந்த காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. கனமான இரும்பு பொருள் தாக்கியதாலும் இறந்திருக்கலாம். அதேசமயம் உடலில் வேறு எந்த காயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
comments | | Read More...

கள்ளக்காதலியை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசியது ஏன் ? ( குஷ்பு ரேவதி )

Penulis : Tamil on Wednesday, 24 July 2013 | 05:21

Wednesday, 24 July 2013

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் ஏரியில் சாக்கு மூட்டையில் கட்டி இளம் பிணம் ஒன்று கிடந்தது. காவேரிபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மூட்டையை பிரித்தனர். அதில் சுமார் 25 வயது மதிக்கதக்க இளம்பெண் பிணம் நிர்வாண நிலையில் இருந்தது.
இந்த கொலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த அருண்குமார், பிரபாகரன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் அருண்குமார், பிரபாகரன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் ரேவதியை கொலை செய்து வீசியது தெரியவந்தது. விசாரணையில் அருண்குமார் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம்
வருமாறு:–
comments | | Read More...

நரேந்திர மோடிக்குத்தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது: காஞ்சி சங்கராச்சாரியார் பேட்டி Prime Minister Narendra Modi has all the qualities Kanchi Sankaracharyar interview

Penulis : Tamil on Tuesday, 23 July 2013 | 23:27

Tuesday, 23 July 2013

வருகிற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த பாரதீய ஜனதா திட்டமிட்டு வருகிறது.
இதே போல் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரில் யாருக்கு பிரதமர் பதவிக்கான தகுதி அதிகம் உள்ளது என்பது பற்றி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் இதற்கு முன்பு கருத்து தெரிவிக்கையில் சோனியாகாந்தி வெளி நாட்டுகாரர் என்றும், இந்தியாவுக்கு தலைமை தாங்கும் தகுதி அவருக்கு கிடையாது என்றும் ஏற்கனவே கூறி இருந்தார்.
இப்போது மீண்டும் ஜெயேந்திரர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:–
comments | | Read More...

பா.ஜனதா கூட்டு முறிந்ததால் பீகாரில் நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்தது

பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகியது.
பாரதீய ஜனதாவுடனான கூட்டணியை முறித்ததால் பீகார் முதல்– மந்திரி நிதிஷ் குமாரின் செல்வாக்கு சரிந்து உள்ளது. தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு மூலம் இது தெரியவந்தது.
2011–ம் ஆண்டு ஜூலை மாதம் பீகாரில் நிதிஷ்குமாரின் அரசு மீது 90 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்தனர். ஆனால் கடந்த ஜூன் மற்றும் இந்த மாதம் நடத்திய கருத்து கணிப்பின்படி 69 சதவீதம் பேரே நிதிஷ்குமார் அரசு மீது திருப்தி தெரிவித்து உள்ளனர்.
comments | | Read More...

சென்னை பெண் கடத்தி கொலை கள்ளக்காதலன் தப்பி ஓட்டம்

Penulis : Tamil on Saturday, 20 July 2013 | 02:24

Saturday, 20 July 2013

அரக்கோணம் அருகே சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பெண் சென்னையை சேர்ந்தவர் என்றும் அவர் கடத்தி கொலை செய்யப்பட்டார் என்றும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17-ந் தேதி அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கம் நங்கமங்கலம் ஏரியில் முள்புதரில் சாக்கு மூட்டைக்குள் பெண் பிணம் நிர்வாண நிலையில் கிடந்தது. சாக்கு மூட்டையில் இருந்து பெண்ணின் கை மட்டும் வெளியே தெரிந்தது.
comments | | Read More...

திவ்யாவுக்கு கவுன்சிலிங் நடக்குமா ?

Penulis : Tamil on Friday, 19 July 2013 | 05:48

Friday, 19 July 2013

தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் கடந்த 4–ந் தேதி ரெயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். அவரது மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் டெல்லி டாக்டர்கள் 3 பேர் நடத்திய மறு பிரேத பரிசோதனை மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனால் இளவரசன் மரண சர்ச்சை முடிவுக்கு வந்தது.
கலப்பு திருமண விவகாரத்தில் தனது தந்தை நாகராஜ் மற்றும் கணவர் இளவரசன் ஆகியோரை இழந்து உள்ள திவ்யாவுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கோர்ட்டு உத்தரவு நகல் திவ்யாவுக்கு தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் மூலம் அனுப்பப்பட்டது. 20–ந் தேதி கவுன்சிலிங் பெற திவ்யா சம்மதம் தெரிவித்து இருந்தார். இதன்படி திவ்யா, அவரது தாயார் தேன்மொழி. தம்பி மணி ஆகிய 3 பேரும் நாளை கவுன்சிலிங் பெற வேண்டும்.
comments | | Read More...

இளவரசன் சாவு தற்கொலை: டெல்லி டாக்டர்கள் குழு உறுதிப்படுத்தியது

Penulis : Tamil on Wednesday, 17 July 2013 | 23:06

Wednesday, 17 July 2013

கருகிபோன இளவரசன் திவ்யா காதல்!

இளவரசன் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? உண்மையில் நடந்தது என்ன? ஒட்டு மொத்த தமிழகமும் இந்த கேள்விகளுக்கு விடை தேடியது. பொதுவாக ஒரு தற்கொலை என்றால் இ.பி.கோ. 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து அனாயசமாக கையாளும் போலீசார் இந்த வழக்கை அவ்வளவு எளிதாக கையாள முடியவில்லை. இடையில் புகுந்த சாதியும், சந்தேகமும் நீதி தேவன் கோவிலில் மண்டியிட்டது.
comments | | Read More...

சிம்புவும் ஹன்சிகாவும் , காதலுக்கு ஏது முற்றுப்புள்ளி

டந்த சில நாட்களாக சிம்புவும், ஹன்சிகாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பரவலாக செய்தி பரவிற்று. சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றிலும் சிம்புவின் அப்பாவான டிஆர், சிம்பு ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்த பரவலான பேச்சால் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு ஹன்சிகா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“சிம்புவும், நானும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வெளியாகும் செய்திகளால், நான் மிகவும் வருத்தமடைந்திருக்கிறேன்.
எங்கள் இருவருக்குமிடையே காதல் எதுவும் இல்லை. இரண்டு படங்களில் சேர்ந்து நடிப்பதால் நண்பர்களானோம். அதை இப்போது காதல் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள்.
மற்ற ஹீரோக்களுடன் எப்படி பழகுகிறேனோ, அப்படியேதான் சிம்புவுடன் பழகி வருகிறேன்.
இப்போதைக்கு நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். என் திருமணம் என் குடும்பத்தார் விருப்பப்படிதான் நடக்கும். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் நான் மணப்பேன்,” என்று கூறினார்.
இதன் மூலம் இந்த வதந்திக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காதலுக்கு ஏது முற்றுப்புள்ளி….

comments | | Read More...

முகேஷ் அம்பானி எபிக் டிவி

Penulis : Tamil on Tuesday, 16 July 2013 | 06:11

Tuesday, 16 July 2013

முகேஷ் அம்பானி ஒரு துணிகரமான முதலீட்டாளராக மாறி, அடுத்த மாதத்திலிருந்து தன் ஒளிபரப்பைத் தொடங்கவுள்ள தொலைக்காட்சி சேனலாகிய எபிக் டிவிக்கு, ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். நாட்டின் வரலாறு, நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணங்களைப் பற்றிய நிகழ்ச்சிகளை தற்போதைய ரசனைக்கு ஏற்றவாறு வழங்கும் உயர்ந்த வரையறையைக் கொண்டுள்ள எபிக் டிவி, தனக்கென ஒரு தனியிடத்தைப் பெறக் கூடிய ஒரு சேனலாக நம்பிக்கையளிக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் 
comments | | Read More...

சிறையில் இருக்கும் காதலனுக்கு ஆபாசப் படம்

Penulis : Tamil on Monday, 15 July 2013 | 22:19

Monday, 15 July 2013

சிறையில் இருக்கும் காதலன் பார்த்து ரசிப்பதற்காக ஆபாசமான முறையில் தன்னை படம் எடுக்கும்படி 9 வயது மகளிடம் கூறிய பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் இண்டியானா மாவட்டத்தை சேர்ந்தவன் ஜெரெமையா லிமாஸ்டர்(24). கணவனை விவாகரத்து செய்துவிட்டு 9 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த ஜோடி ராபர்ட்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்தான்.

சில நாட்களாக அவளிடம் உல்லாசம் அனுபவித்த லிமாஸ்டர் அவளையே திருமணம் செய்துக்கொள்ளவும் முடிவு செய்தான்.

கடந்த மே மாதம் ஒருவரை கத்தியால் குத்திய வழக்கில் கைதான அவன் தற்போது இண்டியானா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறான்.

காதலியின் நிர்வாண படத்தை காண ஆசைப்படுவதாக சிறையில் தன்னை சந்திக்க வந்த ஜோடி ராபர்ட்ஸ் இடம் கூறி அனுப்பியுள்ளான்.

காதலனின் ஆசையை தீர்க்கும் வகையில் ஆபாசமான நிர்வாண நிலையில் இருந்துக்கொண்டு தன்னை புகைப்படம் எடுக்கும்படி மகளிடம் ஜோடி ராபர்ட்ஸ் கூறினாள்.

அருவறுப்பாக இருந்தாலும் தாய் சொல்கிறாளே.. என்று அந்த சிறுமியும் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினாள்.

புகைப்படங்களை ஒரு கவரில் போட்டு சிறைச்சாலைக்கு தபால் மூலம் காதலன் பெயருக்கு அனுப்பி வைத்த போது, கவரின் எடை அதிகமாக இருந்ததால் சந்தேகப்பட்ட சிறை அதிகாரிகள் அந்த ஆபாச புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஜோடி ராபர்ட்ஸ் வீடு தேடிச் சென்ற போலீசார் அவரிடம் புகைப்படங்களை எடுத்தது யார்? என்று கேட்டபோது தனது 9 வயது மகளை கை காட்டினார்.

இதனையடுத்து, சிறுமிக்கு தீங்கான எண்ணத்தை உருவாக்கும் விதமாக செயல்பட்ட குற்றத்துக்காக போலீசார் அவரை கைது செய்தனர்.

காதலுனுக்கு துணையாக இல்லாவிட்டாலும் இணையாக இண்டியானா சிறையில் ஜோடி ராபர்ட்சும் அடைக்கப்பட்டார்.
comments | | Read More...

வருத்தப்படாத வாலிபர் சங்கம்


தற்பொது சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இப்படத்தை பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். சத்யராஜ், சூரி ஆகியோரும் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் தனுஷ், விமல், சதீஷ், இயக்குனர்கள் முருகதாஸ், எழில், பிரபு சாலமன், பாண்டிராஜ், பேரரசு, செந்தில்குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

comments | | Read More...

காதலி மறுத்ததால் காரிலேயே வலுக்கட்டாயமாக இருமுறை கற்பழித்தார்

Penulis : Tamil on Saturday, 13 July 2013 | 23:43

Saturday, 13 July 2013

ஒடிசா மாநிலம் கஜ்சம் மாவட்டம் பேஜிபுட்
என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுசாந்த்குமார்
ஸ்வைன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.
போன் மற்றும் எஸ்.எம்.எஸ்.கள் மூலம்
காதலை வளர்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் சுசாந்த் குமார்
காதலியை அடைய திட்டமிட்டார்.
இதையடுத்து காதலிக்கு எஸ்.எம்.எஸ்.
அனுப்பி புவனேஸ்வர் வருமாறு அழைத்தார்.
அவரை நம்பி சென்ற காதலியை சுசாந்த்குமார்
காரில் அழைத்துச் சென்றார்.
வழியில் திருமணம் செய்வதாக
ஆசை வார்த்தை கூறி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார்.
ஆனால் காதலி மறுத்ததால்
காரிலேயே வலுக்கட்டாயமாக
இருமுறை கற்பழித்தார்.
பின்னர் காரில்
இருந்து வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை சிலர்
மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர்
சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார்
வழக்குப்பதிவு செய்து தலைமறைவான
காதலனை தேடி வருகிறார்கள்.

comments | | Read More...

நாளை இளவரசனின் உடல் எய்ம்ஸ் டாக்டர்கள் மூலம் மறு பிரேத பரிசோதனை

Penulis : Tamil on Friday, 12 July 2013 | 02:21

Friday, 12 July 2013


தர்மபுரி காதல்-கலப்பு திருமண விவகாரத்தில் காதலன் இளவரசனின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறுகிறார்கள். எனவே இளவரசன் பிணத்தை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பட காட்சிகளை ஐகோர்ட்டில் நீதிபதிகள், மத்திய-மாநில அரசு டாக்டர்கள், வக்கீல்கள் பார்த்தனர்.

பிரேத பரிசோதனை பற்றிய ஆய்வு அறிக்கையை டாக்டர்கள் தாக்கல் செய்த பின்பு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால் இளவரசன் உடலை தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
comments | | Read More...

டென்னிஸ் டிக்கெட் வாங்க வந்த இளம்பெண் கற்பழித்த வாலிபர்

Penulis : Tamil on Thursday, 11 July 2013 | 08:33

Thursday, 11 July 2013

இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன்
டென்னிஸ் தொடரில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர்
இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர்
வீரரான ஆண்டி முர்ரே, செர்பியாவின் நோவக்
ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம்
வென்றார்.
இறுதிப் போட்டியில் முர்ரேயின் ஆட்டத்தைக்
காண ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்க
காத்திருந்தனர். அவர்களுக்காக விம்பிள்டன்
பார்க்கில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்,
அங்கு டிக்கெட்டுக்காக காத்திருந்த 34
வயது பெண்ணை, 30 வயது மதிக்கத்தக்க
ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக
கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில் அந்த
வாலிபரை போலீசார்
கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர்
அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரிடம்
செப்டம்பர் மாதம் மீண்டும்
விசாரணை நடத்தப்படும்
என்று ஸ்காட்லாந்து யார்டு போலீசார்
தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட
பெண்ணுக்கு மருத்துவ
பரிசோதனை செய்யப்பட்டது.

comments | | Read More...

பெருந்தலைவர் காமராஜர் போல மீண்டும் ஒரு தலைவர் வர வேண்டும்

Penulis : Tamil on Wednesday, 10 July 2013 | 23:30

Wednesday, 10 July 2013

பெருந்தலைவர் காமராஜர் போல மீண்டும் ஒரு தலைவர் வர வேண்டும். அவர் தந்தது போல பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா
முழுமைக்கும் வர வேண்டும் என்ற ஏக்கம் அவரது வாழ்க்கை வரலாற்றை படித்தவர்களுக்கும் கேள்விப்பட்டவர்களுக்கும் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் காமராஜரின் வாழ்க்கை, இன்றைய இளம் தலைமுறையினரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் திரண்டிருந்த மாணவ – மாணவிகளின் கூட்டமே சாட்சி.
comments | | Read More...

லீனாவை பேஸ்புக் கில் பழகி ஏமாற்றினேன்

சென்னை கொண்டு வரப்பட்ட காதலன் சுகாஷ் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
எனது சொந்த ஊர் பெங்களூர். அப்பா பெயர் சந்திரசேகர். அம்மா பெயர் மாலா. பெங்களூர் நாகா பாவி கிராமத்தில் சிவா அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தேன். பெங்களூர் கிரிஸ்ட் காலேஜில் படித்த நான் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டேன்.
எனது பெற்றோர் ரப்பர் கம்பெனி நடத்தி வருகிறார்கள். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், சினிமா தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காக மோசடியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க தொடங்கினேன்.
லேப்–டாப்பில் என்னைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டேன்.
comments | | Read More...

35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை

Penulis : Tamil on Tuesday, 9 July 2013 | 02:21

Tuesday, 9 July 2013

தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கட்டிட காண்டிராக்டர்
உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் ராகவன். இவர் அங்குள்ள அய்யா வழி கோவிலில் தர்மகர்த்தாவாக உள்ளார். இவருக்கு சுதாகர் (வயது 33), பிரபாகரன் ஆகிய 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் சுதாகர் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும், உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து சாமியார்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவமுருகன் மகள் சூர்யா (30) என்பவருக்கும் கடந்த 35 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

comments | | Read More...

இளவரசன் திவ்யாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம்

Penulis : Tamil on Monday, 8 July 2013 | 02:47

Monday, 8 July 2013

தர்மபுரியில் ரெயில்வே தண்டவாளம் அருகே கடந்த 4–ந் தேதி காதல் கலப்பு திருமணம் செய்த கல்லூரி மாணவர் இளவரசன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டார் என்று அவரது தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேணி, மற்றும் அவரது வக்கீல் ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தினர் ஆகியோர் கூறி வந்தனர். அவரது மரணம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் நேற்று இரவு திடீர் திருப்பம் ஏற்பட்டது.
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இளவரசன் இறப்பதற்கு முன்பு எழுதிய 4 பக்க கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை அவரது உறவினர் ஒருவரிடம் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தை இளவரசன் தனது பெற்றோருக்கும், காதல் மனைவி திவ்யாவுக்கும் எழுதி இருந்தார். அதில் இரண்டு பகுதியாக கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஒரு பகுதி திவ்யாவுக்கும், இன்னொரு பகுதி தந்தை இளங்கோவுக்கும் எழுதப்பட்டு இருந்தது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger