News Update :
Home » , , » கள்ளக்காதலியை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசியது ஏன் ? ( குஷ்பு ரேவதி )

கள்ளக்காதலியை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசியது ஏன் ? ( குஷ்பு ரேவதி )

Penulis : Tamil on Wednesday, 24 July 2013 | 05:21

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் ஏரியில் சாக்கு மூட்டையில் கட்டி இளம் பிணம் ஒன்று கிடந்தது. காவேரிபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மூட்டையை பிரித்தனர். அதில் சுமார் 25 வயது மதிக்கதக்க இளம்பெண் பிணம் நிர்வாண நிலையில் இருந்தது.
இந்த கொலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த அருண்குமார், பிரபாகரன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் அருண்குமார், பிரபாகரன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் ரேவதியை கொலை செய்து வீசியது தெரியவந்தது. விசாரணையில் அருண்குமார் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம்
வருமாறு:–


நான் தனியார் நிறுவன பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறேன். எனது மனைவி குஷ்பு. எனக்கு காவ்யா என்ற 8 மாத கைக்குழந்தை உள்ளது. நான் வேலை சம்பந்தமாக அடிக்கடி அரக்கோணம் சென்று வருவேன்.
அப்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்போன் கடைக்கு சென்ற போது அங்கு ஆந்திராவை சேர்ந்த ரேவதி(25) என்ற பெண் வந்தார். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் கடந்த 3 மாதங்களாக செல்போனில் பேசி வந்தேன்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரேவதி எனக்கு போன் செய்தார். நான் வீட்டில் சண்டை போட்டு வந்துவிட்டேன். திருத்தணி பஸ் நிலையத்தில் உனக்காக காத்து இருக்கிறேன். வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்.
நான் ரேவதியிடம் எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று கூறி இருக்கிறேன். இருந்தாலும் அவர் என்னை அழைத்தார். இதனால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
இதுகுறித்து தர்மநீதி கிராமத்தில் உள்ள எனது நண்பர் வெற்றிவேல்(29) என்பவரிடம் கூறினேன். 8 மாத கர்ப்பிணியான அவரது மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அதனால் வெற்றிவேல் எனது வீட்டில் யாரும் இல்லை. எனவே இங்கு வந்து சில நாட்கள் தங்கி கொள் என்று கூறினார். இதனால் ரேவதியை அழைத்து வந்து வெற்றிவேல் வீட்டில் தங்க வைத்தேன்.
வெற்றிவேல் வீட்டில் நானும், ரேவதியும் உல்லாசமாக இருந்தோம். அப்போது ரேவதி திருமணம் செய்து கொள் என்று கூறி தொல்லை செய்தார். மேலும் போலீசிலும் ஊர் மக்களிடமும் கூறிவிடுவேன் என்று மிரட்டினார்.
இந்த நிலையில் ரேவதி சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருந்தது எனக்கு தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 14–ந்தேதி நான் ரேவதி, வெற்றிவேல் அதே கிராமத்தை சேர்ந்த பிரபாகரன்(23) ஆகியோர் 4 பேரும் சேர்ந்து ஆட்டோவில் பனப்பாக்கத்திற்கு சினிமா பார்க்க சென்றோம்.
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பின்னர் இரவு வீடு திரும்பினோம். வெற்றிவேல் வீட்டு திண்ணையில் படுத்து கொண்டார். வீட்டுக்குள் நாங்கள் இருந்த போது எனக்கும் ரேவதிக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ரேவதியை கொலை செய்ய முடிவு செய்தேன்.
வெளியில் இருந்த வெற்றிவேலிடம் இதனை கூறினேன். இதை தொடர்ந்து ரேவதியை கொலை செய்துவிட முடிவு செய்தோம். உள்ளே இருந்த ரேவதியை நாங்கள் இருவரும் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெரித்தோம். இதில் மூச்சி திணறி அவர் இறந்து விட்டார்.
பின்னர் வீட்டில் இருந்த சாக்குமூட்டையில் ரேவதியின் பிணத்தை போட்டு நான் வெற்றிவேல், பிரபாகரன் ஆகிய 3 பேரும் இரவு 1 மணிக்கு நங்கமங்கலம் ஏரி பகுதிக்கு கொண்டு சென்றோம்.
தடயம் எதுவும் தெரியாமல் இருக்க நாங்கள் 3 பேரும் கையுறையை பயன்படுத்தினோம். அங்கு ரேவதியின் உடலை கீழே வைத்து அணிந்து இருந்த துணியை தூக்கி வீசிவிட்டு அவர் யார் என்று தெரியாமல் இருப்பதற்காக வெற்றிவேல் பாறாங்கல்லை எடுத்து முகத்தை சிதைத்து விட்டார்.
மீண்டும் சாக்குமூட்டையில் பிணத்தை போட்டு அங்கே ஒரு முள்புதரில் வீசிவிட்டு யாருக்கும் தெரியாமல் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டோம். ரேவதியிடம் 2 செல்போன்கள், 12 சிம்கார்டுகள் இருந்தன. சிம்கார்களை சேதப்படுத்தி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் போட்டு விட்டோம். 2 செல்போன்களையும் ஆஞ்சநேயர் கோவில் அருகே பள்ளம் தோண்டி புதைத்து விட்டோம்.
எப்படியும் இந்த வழக்கில் போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார், வெற்றிவேல், பிரபாகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger