கடந்த சில நாட்களாக சிம்புவும், ஹன்சிகாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பரவலாக செய்தி பரவிற்று.
சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றிலும்
சிம்புவின் அப்பாவான டிஆர், சிம்பு ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள
விரும்பினால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்த பரவலான பேச்சால் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு ஹன்சிகா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“சிம்புவும், நானும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வெளியாகும் செய்திகளால், நான் மிகவும் வருத்தமடைந்திருக்கிறேன்.
எங்கள் இருவருக்குமிடையே காதல் எதுவும் இல்லை. இரண்டு படங்களில் சேர்ந்து நடிப்பதால் நண்பர்களானோம். அதை இப்போது காதல் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள்.
மற்ற ஹீரோக்களுடன் எப்படி பழகுகிறேனோ, அப்படியேதான் சிம்புவுடன் பழகி வருகிறேன்.
இப்போதைக்கு நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். என் திருமணம் என் குடும்பத்தார் விருப்பப்படிதான் நடக்கும். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் நான் மணப்பேன்,” என்று கூறினார்.
இதன் மூலம் இந்த வதந்திக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காதலுக்கு ஏது முற்றுப்புள்ளி….

Post a Comment