News Update :
Home » , , » பெருந்தலைவர் காமராஜர் போல மீண்டும் ஒரு தலைவர் வர வேண்டும்

பெருந்தலைவர் காமராஜர் போல மீண்டும் ஒரு தலைவர் வர வேண்டும்

Penulis : Tamil on Wednesday 10 July 2013 | 23:30

பெருந்தலைவர் காமராஜர் போல மீண்டும் ஒரு தலைவர் வர வேண்டும். அவர் தந்தது போல பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா
முழுமைக்கும் வர வேண்டும் என்ற ஏக்கம் அவரது வாழ்க்கை வரலாற்றை படித்தவர்களுக்கும் கேள்விப்பட்டவர்களுக்கும் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் காமராஜரின் வாழ்க்கை, இன்றைய இளம் தலைமுறையினரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் திரண்டிருந்த மாணவ – மாணவிகளின் கூட்டமே சாட்சி.

பெருந்தலைவர் காமராஜரின் 111–வது பிறந்த நாள் விழா வருகிற 15–ந்தேதி நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி தமிழக காங்கிரஸ் சார்பில்  நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
அவர்களது பேச்சில் இன்றைய அரசியல் மீது கடும் சாடல் இருந்தது. படத்தில் மட்டுமே பார்த்த காமராஜரை மானசீக தலைவராக ஏற்று அவரைப் போல ஒரு தலைவரை மீண்டும் நாங்கள் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கத்தோடு மாணவர்கள் பேசினார்கள்.
கிண்டி செல்லம்மாள் கல்லூரி மாணவி மகாலட்சுமி பேசியதாவது:–
எளிய குடும்பத்தில் பிறந்து, ஏழைகளுக்காக உழைத்தவர் காமராஜர். பிரச்சினைகளை தீர்ப்பவர் மட்டும் தலைவர் அல்ல. அதற்கான பின்னணியையும் கண்டறிந்து தீர்ப்பவரே உண்மையான தலைவர். அப்படித்தான் ஏழை குழந்தைகளை பார்த்ததும், அவர்கள் பள்ளிக்கு செல்லாத காரணத்தை அறிந்து மதிய உணவை தந்து கல்வி கண்களை காமராஜர் திறந்தார். இன்று நாட்டுக்காக உழைக்கும் தலைவர்கள் தான் தேவை. நோட்டுக்காக உழைப்பவர்கள் தேவையில்லை.
பெருந்தலைவர் பிறந்த ஜூலை 15–ந்தேதி பிறந்த நாள். அவர் போட்ட மதிய உணவை சாப்பிட்டு என் பள்ளிப்படிப்பை படித்தேன். என் உயிர் இருக்கும் வரை கல்வி தந்த அந்த தலைவனின் என் மனதில் இருக்கும்.
இவ்வாறு மகாலட்சுமி பேசினார்.
லயோலா கல்லூரி மாணவர் திருமாறன் பேசியதாவது:–
படிக்காத மேதை காமராஜர். அனுபவ அறிவால் அத்தனை தகுதிகளையும் பெற்றார். எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் வராத வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. ஆனால் அவர் எதையும் நாடவில்லை. மக்கள் நலனை மட்டும் நாடி இருக்கிறார்.
ஒரு முதல்–அமைச்சர் வீட்டுக்கு பலர் வருவார்கள். அவர்களை உபசரிக்க மாதம் தோறும் அனுப்பும் பணம் போதாது கூடுதலாக ரூ.30 அனுப்பு என்று கேட்ட தாயாரிடம், அதெல்லாம் முடியாது. சிக்கனமாக செலவு செய் என்று கட்டளையிட்ட தலைவர் அவர்.
ஆனால் இன்று நிதி இல்லை... நிதி இல்லை... என்று சொல்லி கொண்டே விமானத்தில் பறக்கும் தலைவர்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம்.
காமராஜர் பள்ளிக்கு சென்றாரா? கல்லூரிக்கு சென்றாரா? என்று விமர்சித்தவர்களிடம் நான் படிக்காத பள்ளிகளில் என் பிள்ளைகள் படிக்கட்டும். நான் கால் வைக்காத கல்லூரிகளில் என் பிள்ளைகள் கால் வைக்கட்டும் என்று தான் உழைக்கிறேன் என்றவர் அவர்.
அகிலம் இது வரை கண்டிராத தலைவர் அவர். அப்படியொரு தலைவர் மீண்டும் பிறந்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger