
இதற்கிடையே திவ்யா தாயார் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து திவ்யா கடத்தப்பட்டிருப்பதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் சுந்தரேஸ் முன்பு கடந்த 3–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான திவ்யா தனது தாயாருடன் செல்வதாக கூறினார். இந்த நிலையில் மறுநாள் இளவரசன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேன்மொழியின் வக்கீல் ரூபட்பர்னபாஸ் ஆஜராகி, இளவரசன் இறந்து விட்டதால் தற்போது திவ்யா தயாருடன் வசித்து வருகிறார். எனவே, நாங்கள் தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்றார்.
அப்போது இளவரசன் வக்கீல் ரஜினிகாந்த் கூறுகையில், இளவரசன் மரணம் உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்து விட்டதால் இவற்றையும் கோர்ட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இரு தரப்பு கருத்துக்களை கேட்ட நீதிபதிகள் திவ்யாவை மீட்க கோரி தேன்மொழி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
Post a Comment