News Update :
Home » , » லீனாவை பேஸ்புக் கில் பழகி ஏமாற்றினேன்

லீனாவை பேஸ்புக் கில் பழகி ஏமாற்றினேன்

Penulis : Tamil on Wednesday 10 July 2013 | 01:11

சென்னை கொண்டு வரப்பட்ட காதலன் சுகாஷ் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
எனது சொந்த ஊர் பெங்களூர். அப்பா பெயர் சந்திரசேகர். அம்மா பெயர் மாலா. பெங்களூர் நாகா பாவி கிராமத்தில் சிவா அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தேன். பெங்களூர் கிரிஸ்ட் காலேஜில் படித்த நான் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டேன்.
எனது பெற்றோர் ரப்பர் கம்பெனி நடத்தி வருகிறார்கள். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், சினிமா தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காக மோசடியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க தொடங்கினேன்.
லேப்–டாப்பில் என்னைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டேன்.
ரூ.50 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ ஆடம்பர கார் வாங்க டி.டி. அனுப்பியது போலவும், பணத்தை கம்பெனிகாரர்கள் பெற்றுக் கொண்டது போலவும் லேப்–டாப்பில் பதிவு செய்து அதை மற்றவர்களிடம் காட்டினேன். நான் பெரிய பணக்காரன் என்று மற்றவர்களை நம்ப வைத்தேன்.
லேப்–டாப்பில் பெங்களூர் மாடல் அழகிகளின் போட்டோக்களை பதிவு செய்தேன். அவற்றை மற்றவர்களிடம் காட்டி சினிமா தயாரிப்பாளர் என்றும் என்னிடம் சான்ஸ் கேட்டு வந்த அழகிகள் என்றும் சொல்வேன்.
பெங்களூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயகுமார் ஓய்வு பெற்றார். அவரது பெயரை பயன்படுத்திக் கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்தேன். சிகப்பு விளக்கு பொருத்திய காரில் அதிகாரி போல் உலா வந்தேன்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழில் அதிபரின் வெல்டிங் மிஷின் உற்பத்தி நிறுவனத்துக்கு கர்நாடக அரசிடம் இருந்து ரூ.120 கோடி ஆர்டர் பெற்றுத் தருவதாக அம்பத்தூர் கனரா வங்கி கிளையில் ரூ.19.75 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டோம்.
கர்நாடக அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ். என்று சொல்லி இந்த மோடியில் ஈடுபட்டேன். இதற்காக அவரது போலியாக இ.மெயில் கடிதம் தயாரித்தேன். டெலிபோனிலும் அவரைப் போல பேசி நடித்தேன்.
இதே போல் சேலையூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்ற டெக்ஸ்டைல்ஸ் அதிபரிடம் கர்நாடக அரசிடம் சீருடை ஆர்டர் பெற்றுத் தருவதாக நானும், லீனா மரியாபாலும் சேர்ந்து ரூ.1 லட்சம் மோசடி செய்தோம். அவரிடமும் நான் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ். என்று சொல்லி ஏமாற்றினேன்.
எனது செயலாளர் என்று சொல்லி லீனா மரியாபால் சக்கரவர்த்தியிடம் பேசினார். சொன்னபடி ஆர்டர் கிடைக்காததால் சக்கர வர்த்தி நேரடியாக கர்நாடக அரசிடம் விசாரித்தபோது ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ். என்று யாரும் இல்லை என்றும் சுகாஷ் என்பவர் தான் ஏமாற்றியுள்ளார் என்றும் கூறி இருக்கிறார்கள். இதனால் நானும் லீனாவும் தலைமறைவாகி விட்டோம்.
கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கு பெல்லாரியில் இருந்து சுரங்க ஏலம் எடுத்து தருவதாக ரூ.3 லட்சம் ஏமாற்றினேன். கார் வாங்கித் தருவதாக பிரேம் என்பவரிடம் மோசடி செய்தேன்.
சென்னையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் கார் வாங்கித் தருவதாக ரூ.2 லட்சமும், அனுபமாராவ் என்பவரிடம் ரூ.4.5 லட்சமும் பெற்றேன். மதுரையைச் சேர்ந்த ஒரு தியேட்டர் அதிபரிடமும் ரூ.10 ஆயிரம் ஏமாற்றினேன். அப்போது ஊமச்சிக்குளம் போலீசில் சிக்கினேன்.
சென்னை சேத்துப்பட்டில் அழகு நிலைய உரிமையாளரிடம் விலை உயர்ந்த கார் வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் பெற்றேன். இதுபோல் தமிழ்நாட்டில் 6 மோசடிகளில் ஈடுபட்டேன்.
நான் பேஸ்புக்கில் பல்வேறு நபர்களுடன் பேசுவது வழக்கம். லீனா மரியாபாலும் பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார். அவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லி பழகினேன். அவரை ஏமாற்றினாலும் அவரை காதலித்தேன். கையில் லீனா என பச்சை குத்திக்கொண்டேன்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், பிரெஞ்ச் என 8 மொழிகள் தெரியும். மோசடி பணத்தில் எனக்கு பாதுகாப்புக்கு மட்டும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் 10 மெய்க்காப்பாளர்கள் வைத்துக் கொண்டேன். இதற்காக மாதம் ரூ. 1 1/2 லட்சம் செலவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger