News Update :
Home » , , , , » சென்னை பெண் கடத்தி கொலை கள்ளக்காதலன் தப்பி ஓட்டம்

சென்னை பெண் கடத்தி கொலை கள்ளக்காதலன் தப்பி ஓட்டம்

Penulis : Tamil on Saturday, 20 July 2013 | 02:24

அரக்கோணம் அருகே சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பெண் சென்னையை சேர்ந்தவர் என்றும் அவர் கடத்தி கொலை செய்யப்பட்டார் என்றும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17-ந் தேதி அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கம் நங்கமங்கலம் ஏரியில் முள்புதரில் சாக்கு மூட்டைக்குள் பெண் பிணம் நிர்வாண நிலையில் கிடந்தது. சாக்கு மூட்டையில் இருந்து பெண்ணின் கை மட்டும் வெளியே தெரிந்தது.


இதைப்பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரித்தார். அந்த பெண்ணுக்கு 25 முதல் 30 வயது இருக்கும். முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் அவர் யார் என்று அடையாளம் தெரிய வில்லை. தலையில் வெட்டுக் காயங்கள் இருந்தன. கையில் கயிறு கட்டி இருந்தார். இதுபற்றிய செய்தி மாலை மலரில் 17-ந் தேதி படத்துடன் வெளியாகி இருந்தது.

இதற்கிடையே சென்னை திருவான்மியூரை சேர்ந்த கங்காதேவி (27) என்ற பெண் காணாமல் போய்விட்டார். இவருக்கு திருமணமாகி விட்டது. கணவர் சரவணன். திருவான்மியூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். கடந்த 13-ந் தேதி கங்காதேவி காணாமல் போய்விட்டார். 2 நாள் கழித்து அவரிடம் இருந்து சரவணனுக்கு போன் வந்தது. தன்னை கார்த்திக் என்பவர் கடத்தி சென்று விட்டதாக கூறினார். இதையடுத்து மனைவியை கடத்திச் சென்றுவிட்டதாக சரவணன் திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார். மனைவியை உறவினர்கள் வீடுகளில் சரவணன் தேடினார். கிடைக்க வில்லை.

இந்த நிலையில் மாலைமலரில் வந்த செய்தியை பார்த்த ராணிப்பேட்டை தனியார் பள்ளி ஆசிரியை கங்காதேவி காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் சென்றார். தனது அண்ணன் மகள் கங்காதேவி காணாமல் போய்விட்டார். எனவே பணப்பாக்கம் புதரில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலைப்பார்க்க வேண்டும் என்றார். தனது அண்ணன், கங்கா தேவியின் கணவர் சரவணன் மற்றும் உறவினர்களுடன் சென்று வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள இளம்பெண்ணின் உடலைப்பார்த்தனர்.

அங்க அடையாளங்களை வைத்து அது கங்காதேவிதான் என்பதை உறுதி செய்தனர். போலீஸ் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கங்காதேவி கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. திருநின்றவூரை சேர்ந்த கங்காதேவிக்கும், சரவணனுக்கும் 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 13-ந் தேதி மதியம் 1 மணிக்கு காங்காதேவி கணவர் சரவணனிடம் திருநின்றவூரில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அன்று பிற்பகல் 2.40 மணிக்கு தனது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு போன் செய்து என்னை கார்த்திக் என்பவன் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அடித்து இழுத்து செல்கிறான் என்னை காப்பாற்றுங்கள் என்று கூறிய நிலையில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனே அந்த பெண்ணுக்கு ரவிச்சந்திரன் தொடர்பு கொண்ட போது யாரும் எடுக்கவில்லை.

இதுபற்றி அவர் திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர் மாயமானது பற்றி திருவான்மியூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. திருவான்மியூர் இன்ஸ் பெக்டர் சந்துரு, ரவிச்சந்திரனுக்கு அழைப்பு வந்த செல்போனில் பேசிய போது அது சென்ட்ரல் அருகே உள்ள ஒரு கடைக்காரரின் போன் என தெரிந்தது. அவரிடம் விசாரித்த போது, சம்பவத்தன்று மாலையில் இங்கு ஓடி வந்த பெண், தன்னை ஒருவர் அடிப்பதாக கூறி என்னிடம் செல்போன் வாங்கி பேசினார். அதற்குள் அந்த வாலிபர் ஓடி வந்து போனை பறித்து சுவிட்ச் ஆப் செய்தார்.

நாங்கள் யார் என்று கேட்டதற்கு இவர் எனது பெண் நண்பர் என்று கூறி அடித்து உதைத்து இழுத்து சென்றார் என்று தெரிவித்தார். அதன் பிறகு மாலையில் ரவிச்சந்திரனுக்கு கார்த்திக் என்பவர் போன் செய்து உன் தங்கையை தூக்கிச்சென்று விட்டோம் என்னை ஒன்றும் செய்ய முடியாது, எங்களை கண்டு பிடிக்கவும் முடியாது என்று கூறி போனை துண்டித்துவிட்டார்.

கார்த்திக் (23) என்பவர் திருநின்றவூரில் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு அருகில் வசிக்கிறார். தந்தை பெயர் சந்தானம். கார்த்திக் தன்னை விட 4 வயது அதிகம் ஆன கங்கா தேவியை காதலித்துள்ளார். திருமணமான பின்பும் இவர்களது காதல் தொடர்ந்தது. இந்த நிலையில் கங்கா தேவியின் கணவர் சரவணனுக்கு வேலை போய்விட்டது. அவர் வேறு வேலைக்கும் செல்லவில்லை. குழந்தையும் இல்லாததால் எந்நேரமும் வீட்டில் இருப்பது பிடிக்க வில்லை. இதனால் அடிக்கடி திருநின்றவூர் பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்று கார்த்திக்கை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தார்.

இவர்களது கள்ளக்காதல் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்ததும் அவர்கள் இருவரையும் கண்டித்தனர். மேலும் ரவிச்சந்திரன் கார்த்திக் வீட்டுக்கு வந்து சண்டை போட்டு தகராறு செய்தார். கார்த்திக்கை இனி சந்திக்க கூடாது என்று கங்காதேவியையும் கண்டித்துள்ளார். தங்களது காதலை பிரித்ததால் ஏமாற்றம் அடைந்த கார்த்திக் கங்காதேவியை கடந்த 13-ந் தேதி மீண்டும் போன் செய்து அழைத்தார். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. என்னை மறந்துவிடு என்று கங்காதேவி மறுத்து இருக்கிறார்.

கார்த்திக்குடன் செல்ல மறுத்த கங்காதேவியை அவர் அடித்து உதைத்து இழுத்து சென்றார். அரக்கோணம் பகுதிக்கு கடத்தி சென்று கங்காதேவியை கற்பழித்து கொலை செய்து இருக்கிறார். கார்த்திக் தனது நண்பர்களையும் வரவழைத்துள்ளார். அவர்களும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. கங்காதேவி கடத்தப்பட்ட நாளில் இருந்து கார்த்திக்கும் தலைமறைவாகி விட்டார்.

திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் சந்துரு திருநின்றவூர் சென்று கார்த்திக் பற்றியும், அவரது நண்பர்கள் பற்றியும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து விசாரித்து வருகிறார். கார்த்திக் பிடிபட்டால் தான் அவர் கங்காதேவியை எங்கு கடத்தினார், எப்படி கொலை செய்தார், உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது தெரிய வரும்.      
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger