வருகிற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த பாரதீய ஜனதா திட்டமிட்டு வருகிறது.
இதே
போல் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக களம்
இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரில் யாருக்கு பிரதமர்
பதவிக்கான தகுதி அதிகம் உள்ளது என்பது பற்றி பலரும் தங்களது கருத்துக்களை
தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் இதற்கு முன்பு கருத்து தெரிவிக்கையில் சோனியாகாந்தி வெளி நாட்டுகாரர் என்றும், இந்தியாவுக்கு தலைமை தாங்கும் தகுதி அவருக்கு கிடையாது என்றும் ஏற்கனவே கூறி இருந்தார்.
இப்போது மீண்டும் ஜெயேந்திரர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:–
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வரவேற்கதக்கது. நரேந்திர மோடி தகுதியான வேட்பாளர். நிர்வாக திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்.
ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுகாரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்தியும் வெளிநாட்டுகாரரின் மகன் என்ற நிலையில் இந்தியாவுக்கு தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டி உள்ளது.
நரேந்திரமோடி–ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டு பார்க்கும் போது நரேந்திர மோடிக்குதான் முதலிடம் கிடைக்கும். நிர்வாக திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர். குஜராத் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றவர். மதசார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம்.
இவ்வாறு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் கூறியுள்ளார்.

Post a Comment