News Update :
Home » » வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

Penulis : Tamil on Monday 15 July 2013 | 05:50


தற்பொது சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இப்படத்தை பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். சத்யராஜ், சூரி ஆகியோரும் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் தனுஷ், விமல், சதீஷ், இயக்குனர்கள் முருகதாஸ், எழில், பிரபு சாலமன், பாண்டிராஜ், பேரரசு, செந்தில்குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


படத்தின் தயாரிப்பாளர் மதன், சிறப்பு விருத்தினரையும் படக்குழுவினரையும் வரவேற்றார்.


பட விழாவில் சத்யராஜ் பேசும் போது,


சிவகார்த்திகேயன் எப்போதும் ஹீரோயின் பக்கத்திலேயே இருப்பார். அவங்களுக்கு தமிழ் சொல்லி தர்றேன்னு அங்க உட்கார்ந்தார். ஆனால் இவர் தெலுங்கு கத்துகிட்டு வந்துட்டாருன்னா பாருங்க என்று சத்யராஜ் தனது உரையில் சிவகார்த்திகேயனை போட்டுக் கொடுக்க,


பதிலுக்கு அம்பு தொடுத்தார் சிவா கார்த்தி...


சத்யராஜ் சார் என்னை பற்றி சொன்னார். நானும் அவரை பற்றி சொல்லணும். இப்போ இந்தி தெலுங்குன்னு பின்னி எடுக்கிறார் அவர். ஹீரோவா நடிச்சிருந்தா கூட அவ்வளவு கொடுப்பினை இருக்குமான்னு தெரியாது.


அப்பா கேரக்டரில் நடிக்கறதுல ரொம்பவே சவுரியம் இருக்கு. மகளேன்னு இலியானாவை கட்டிப்பிடிக்கிறாரு. அப்படியே இந்திக்கு போனா தீபிகா படுகோனவே மகளேன்னு அணைச்சுக்கிறாரு. இங்க சார் சொன்ன மாதிரி எதுவுமே நடக்கலேங்க. நான் கத்துகிட்ட தெலுங்கு வார்த்தை மூணே மூணுதான். 'உங்க அம்மா எப்ப வரமாட்டாங்க?' இதுதான் நான் தெலுங்குல கத்துகிட்டது.


ஏன்னா,.. ஹீரோயின் பக்கத்திலேயே எப்பவும் அவங்க அம்மா இருப்பாங்க. இந்த மேடையில வச்சு ஒண்ணு சொல்றேன். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வேண்டுகோள் இது. இனிமே ஷுட்டிங்குக்கு கதாநாயகிகளோட அம்மா வரவே கூடாது. வந்தாலும் எங்காவது ஓரமா உட்கார்ந்துக்கலாம். கதாநாயகி பக்கத்திலேயே வரக்கூடாது. இப்படி சிவகார்த்திகேயன் பேச பேச கதாநயாகி ஸ்ரீதிவ்யாவின் அம்மாவுக்கு வெட்கமோ வெட்கம்.


அடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தனுஷ் பேசும் போது,
இந்தி படம் என்பது நான் அணியும் சர்ட், பேண்ட் மாதிரி. அதை உடுத்ததான் முடியும். ஆனால் தமிழ் படம் என்பது என்னுடைய உயிர்மூச்சு. என் குடும்பத்தில் நான் கடைசி பையன், எனக்கு தம்பி இல்லாதது எனக்கு வருத்தம். சிவகார்த்திகேயனை எனது தம்பியாக நினைக்கிறேன். அவருக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றார்.
இப்படத்தின் இசை தட்டை டைரக்டர் முருகதாஸ் வெளியிட நடிகர் தனுஷ் பெற்றுக்கொண்டார். இறுதியில் இப்படத்தின் இயக்குனர் பொன்ராம் நன்றியுரை கூறினார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger