தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் கடந்த 4–ந் தேதி
ரெயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். அவரது மரணம் பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தினாலும் டெல்லி டாக்டர்கள் 3 பேர் நடத்திய மறு பிரேத பரிசோதனை
மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனால் இளவரசன் மரண சர்ச்சை
முடிவுக்கு வந்தது.
கலப்பு திருமண விவகாரத்தில் தனது தந்தை நாகராஜ் மற்றும் கணவர் இளவரசன் ஆகியோரை இழந்து உள்ள திவ்யாவுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கோர்ட்டு உத்தரவு நகல் திவ்யாவுக்கு தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் மூலம் அனுப்பப்பட்டது. 20–ந் தேதி கவுன்சிலிங் பெற திவ்யா சம்மதம் தெரிவித்து இருந்தார். இதன்படி திவ்யா, அவரது தாயார் தேன்மொழி. தம்பி மணி ஆகிய 3 பேரும் நாளை கவுன்சிலிங் பெற வேண்டும்.
இந்த கவுன்சிலிங் திவ்யா வீட்டில் நடக்குமா? அல்லது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடக்குமா என்று தெரிய வில்லை. யாருக்கும் தெரியாத ரகசியமான இடத்தில் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள். இதனால் எங்கு கவுன்சிலிங் நடக்கும் என்று தெரியவில்லை.
இன்று காலை வரை திவ்யாவுக்கு கவுன்சிலிங் நடத்துவது தொடர்பாக எந்த வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று போலீஸ் மற்றும் வருவாய்த்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு வேளை இன்னும் ஒரு சில நாட்கள் கழித்து இந்த கவுன்சிலிங் நடை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மன நல மருத்துவத் துறை தலைமை பேராசிரியர்களாக பணியாற்றும் டாக்டர்கள் ரவிசங்கர் ராஜேசுவரி ஆகியோர் திவ்யாவுக்கு கவுன்சிலிங் கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர்கள்தான் கவுன்சிலிங் கொடுக்க உள்ளனர்.

Post a Comment