News Update :
Home » » 'அதுலயும்' அமெரிக்காதாங்க 'டாப்'!

'அதுலயும்' அமெரிக்காதாங்க 'டாப்'!

Penulis : karthik on Sunday, 22 April 2012 | 10:53




Sex Sells.... உலகம் பூராவும் இந்த வார்த்தையை அதிகம் கேட்டிருக்கலாம். அந்த அளவுக்கு உலகில் உடனுக்குடன் ஹிட் அடிப்பது செக்ஸ் சமாச்சாரங்கள் மட்டுமே. பத்திரிகைகளில் விற்பனை டல் அடித்தால் உடனே செக� �ஸ் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டு தூக்கி விடுவார்கள் மார்க்கெட்டை. அதேபோலத்தான் சினிமாக்களிலும், மீடியாக்களிலும் கூட செக்ஸ்தான் முக்கியக் கருவியாக இருக்கிறது.

தாம்பத்யம் பற்றி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலத்தில் செக்ஸ், பிற மொழிகளில் செஸ்ஸோ, செக்சாஸ், செஸ்க் என பலவித பெயர்களில் அழைக்கப்படுகிறது செக்ஸ் உறவு.

செக்ஸ் விஷயங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி உள்ளன என்பதை படித்துப் பாருங்களேன்...

செக்ஸ் வரி

செக்ஸ்சுக்கு வரி என்றதும் ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தியாவில் அல்ல ஜெர்மனியில்தான் இந்த கூத்து. ஜெர்மன் நகரங்களில் விபச்சாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அது மட்டுமல்ல அத்தொழிலில் ஈடுபடுவோர் அரசுக்கு வரி கட்ட வேண்டும். விபச்சார விடுதிகளில் ஈபி மீட்டர் போல மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்கின்ற� �ராம்.

200 க்கும் மேற்பட்ட செக்ஸ் தொழிலாளிகள் அங்கு ஆண்டுக்கு 2 லட்சம் ஈரோ சம்பாதிக்கின்றனர். அவர்கள் வருமானத்திற்கு ஏற்ப வரியும் கட்டுகின்றனர். சந்தோஷத்திற்காக வரும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு அங்கு கையோடு ரசீதையும் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.

ஆண்மையின் அடையாளம் ரஷ்யா

ரஷ்யர்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் பெரிய அளவில் மகிழ்ச்சிகரமாக இல்லை என்று சமீபத்தில்தான் ஒரு கருத்துக் கணிப்பு கூறியது. ஆனால் நிஜத்தில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதை ஒரு பெண்ணின் தாய்மைச் சாதனை கட்டியம் கூறுகிறது.

ரஷ்ய பெண்மணி ஒருவர் 69 முறை தாய்மை அடைந்து பிள்ளை பெற்றுள்ளார். உலகிலேயே அதிக முறை தாய்மையடைந்து குழந்தை பெற்ற சாதனைக்குரியவர் இவர்தான். இதில் 16 முறை இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளார். 7 முறை தலா மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளார். 4 முறை தலா 4 குழந்தைகளைப் பெற்று பிரமிக்க வைத்துள்ளார். இவருக்கு ஓய்வே இல்லையோ என்றுதான் எண்ணத் தோன� �றுகிறது!.

செக்ஸ் பொம்மைக்கு தடை

உலகிலேயே கவர்ச்சிப் பெண்ணாக பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்டனர் ஜெனீபர் லோபஸ். அதேபோல ஹாலி பெர்ரி, பிரிட்னி பியர்ஸ் ஆகியோரும் செக்ஸியானவர்களாக கருத்துக் கணிப்புகள் மூலம் அறியப்பட்டவர்கள். இவர்களால் அமெரிக்காவுக்கும் பெருமைதான். ஆனால் அமெரிக்காவில் செக்ஸ் விஷயத்தில் ரொ்ம்பவே இப்போது கட்டுப்பாட� ��களைக் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக பாலுணர்வைத் தூண்டும் வகையிலான செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு அலபாமாவில் தடை உள்ளதாம். மற்ற பகுதிகளில் இப்படியெல்லாம் இல்லை.

அமெரிக்கர்கள்தான் டாப்

சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 132 முறை செக்ஸ் உறவு கொள்கின்றனராம். செக்ஸ் உறவு கொள்வதில் இவர்கள்தான் உலகிலேயே நம்பர் ஒன்னாக உள்ளனர். இரண்டாவது இடத்தை ரஷ்யர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் ஆண்டுக்கு 122 முறையும், முத்தத்திற்குப் பெயர் போன பிரெஞ்ச் நாட்டினர் 121 முறையும் உறவில ் ஈடுபடுகின்றனராம்.

நான்காவது இடத்தில் கிரீக் நாட்டினர் உள்ளனர். உலகிலேயே குறைந்த அளவில் உறவில் ஈடுபடுவது ஜப்பான், மலேசியா, சீனர்கள்தானம். அவர்களுக்கு அதில் ஈடுபாடு அதிகம் இல்லை போல. இந்தியா இந்த விஷத்தில் ரொம்ப தூரத்தில்தான் உள்ளது.

சீனாவின் சக்தி

செக்ஸ் மூலம் உடலில் எண்ணற்ற சக்தி கிடைக்கிறது என்பது சீனாவில் உள்ள தாவோயிச நம்பிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. செக்ஸ் உறவின்போது பெண்களிடமிருந்து வெளிப்படும் சக்தி தங்களை வந்தடைவதாக அவர்கள் நம்புகின்றனர். இதனாலேயே தாவோயிஸ்டுகள் பலர் பல பெண்களுடன் உறவு கொள்வதை ஊக்கமளித்து வந்தனராம். இதன் மூலம் தங்களுக்கு பெருமளவில் சக்தி கிடைப்பதாக அவர்கள் நம்புகின்றனர். பெண்களே சக்தி என்ற நம்ம ஊர் தத்துவத்தை இவர்கள் இப்படி உல்டாவாக நம்பியுள்ளனர் என்பது சுவாரஸ்யமானதுதான்.

உடம்பே தட்டு

ஜப்பானியர்கள் தாம்பத்ய உறவிற்கு முன்பு வித்தியாசமான முறையில் உணவுகளை உட்கொள்கின்றனர். அதாவது நிர்வாண நிலையில் பெண்களை படுக்க வைத்து தட்டு போல பாவித்து அவர்களின் உடம்பு மீது உணவு வகைகளை பரிமாறி சாப்பிடுகின்றனர். இதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு பெரும் கிளர்ச்சி ஏற்படுமாம். இப்படிப்பட்ட செயல்கள் இன்றும் கூட ஜப்பானில் நட ைமுறையில் உள்ளதாம்.

ஆண்மை தினம்

ஜப்பானில் கடந்த மார்ச் 15 ம் தேதி ஆண்மை தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவின் முக்கிய அம்சமே ஆண்குறியைப் போற்றிக் கொண்டாடுவதாம். இந்த விழாவின் ஒரு பகுதியாக 250 ஆண்களும், 250 பெண்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உறவு கொண்டனர். அதுதொடர்பான டிவிடியையும் வெளியிட்டனர்.

இப்படி செக்ஸ் விஷயங்கள் உலகம் பூராவும் வித்தியாசமாகவும், வினோதமாகவும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger