யூ டிவி நிறுவனம் தயாரிக்கும் 'தாண்டவம்' படத்தை விஜய் இயக்குகிறார். தெய்வத் திருமகள் படத்திற்கு பிறகு விஜய்யும், விக்ரமும் இணையும் படம். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக அனுஷ்காவும், 'மதராச பட்டினம்' படத்தில் நடித்த எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போத ு லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு மேலும் ஒரு நாயகியாக லட்சுமிராய் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அடுத்த வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக லட்சுமிராய் 25 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து லட்சுமி ராய் கூறும்போது, கடந ்த வருடத்தில் நான் நடித்து வெளியான மங்காத்தா', 'காஞ்சனா' படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்தது. அதேபோல், இப்படத்திலும் எனது கதாபாத்திரம் பாராட்டும்படி இருக்கும் என நம்புகிறேன் என கூறினார்.
இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டை ஜுலையிலும், படத்தை ஆகஸ்ட் அல்லது செப� ��டம்பரில் வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் சந்தானம், தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன், சாயாஜி ஷிண்டே, கோட்டா சீனிவாசராவ், டெல்லி கணேஷ் ஆகிய நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளனர்.
http://mobilesexpicture.blogspot.com
Post a Comment