உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார் உதயநிதி. கூடவே படத்தின் இயக்குநர் ராஜேஷ் மற்றும் படத்தில் நடித்திருக்கும் நடிகர் சந்தானம் ஆகியோரும் செல்கின்றனர். இதற்காக கடந்த இரண்டு தினங்களாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார ் உதயநிதி.
மதுரையில் பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்து இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.
மதுரையில் உள்ள பாண்டியன் ஓட்டலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக ஒரு அறை ஒதுக்கப் பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். எப்போது மதுரை வந்தாலும் இந்த அறையில் தான் தங்குவார்.
எம்.ஜி.ஆர். மதுரையில் இல்லாத நாட்களிலும் இந்த அறையை வேறு யாருக்கும் தரமாட்டார்கள். இந்த விஷேச அறையை கேட்டு வாங்கி தங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
Post a Comment