மழைக் காட்சிகளில் கவர்ச்சிகரமாக நனைந்து நடிக்க தமன்னா ரெடியாம். ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டு ம் போடுகிறார். அதாவது, மழைக் காட்சிகளை படமாக்கும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இதற்கு ஒத்துக் கொண்டால், அவருக்கு ஓ.கேதானாம்.
நடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவர் தெலுங்கில் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகளும் அதிகரி்த்துள்ளது. விளம்பரப் படங்களில் அவர் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க முன்னணி நிறுவனங்� ��ள் தயாராக உள்ளன. அதனால் அவர் ரொம்பவே குஷியாக உள்ளார்.
தமன்னாவுக்கும் மழைக்கும் அவ்வளவு ராசி. அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டுக்காவது அவருக்கு வெள்ளை கலர் டிரஸ் கொடுத்து மழையில் ஆட்டம் போட வைக்கின்றனர். தமிழில் அவர் கார்த்தியுடன் ஆடிய அடடா மழைடா, அடைமழைடா பாட்டை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
மழைக் காட்சிகளைப் படமாக்கும்போது ஈரம் சொட்ட சொட்ட ஆடும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் இயக்குனர்களுக்கு உத்தரவு போடுகிறார். அவர் உத்தரவு போடுவது சரி பார்வையாளர்களை இயக்குனர்கள் எப்படி கட்டுப்படுத்தப் போகிறார்களோ?
Post a Comment