டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான புனே வாரியர்ஸ் அணியின் வெற்றியை அந்த அணியின் முன்னாள் கேப்டன் யுவராஜ் சிங் டிவிட்ட ரில் கொண்டாடி மகிழ்ந்தார்.
புற்றுநோய் சிகிச்சையை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள யுவராஜ் தற்போது முழு ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் புனே அணியின் கேப்டனாக விளையாடியவர் யுவராஜ்சிங்.
தற்போது ஓய்வில் இருப்பதால் நடப்பு ஐ.பி.எல்.5-வது தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இருப்பினும் புனே அணியின் ஆட்டங்களை தொடர்ந்து அவர் கவனித்து வருகிறார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டியை பார்த்துக் கொண்டே ஒரு பக்கம் டிவிட்டரில் லைவ் கமெண்ட்ரியும் அடித்துக் கொண்டே இருந்தார் யுவராஜ்.
அதுவும் குறிப்பாக கங்குலியின் பந்துவீச்சை புகழ்ந்துகொண்டே அவரது தலைமுடி பற்றியும் கிண்டலடித்துக் கொண்டு கலாய்த்திருக்கிறார் யுவி.
கங்குலி ஒவ்வொரு முறையும் பந்துவீசும் அதை கலாய்த்துக் கொண்டே , "தாதா! கடந்த 3 மாதமாக என்னுடைய ஹேர் ஜெல்லை யூஸ் பண்ணாம இருக்கேன்.. வேணும்னா தரட்டுமா..." என்று டிவிட்டரில் அடி த்து விட்டிருக்கிறார்.
யுவி ரசிகர்களுக்கு இன்னுமொரு செய்தி... உங்க ஆள் இப்ப பயிற்சிக்குத் தயாராகிட்டாராம்... இன்னும் கொஞ்ச நாளில் பீல்டுக்குத் திரும்பி விடுவாராம்...
Post a Comment