திருச்சி புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகளை மாற்றி, முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, திருச� ��சி புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., துணைச் செயலராக இருந்த ராவணனுக்கு பதில், கும்பக்குடி கோவிந்தராஜ் புற நகர் மாவட்ட புதிய துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட துணைச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ராவணன், கடந்த ஒன்றரை ஆண்டாக காலியாக இருந்த திருவெறும்பூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், திருவெறும்பூர் ஜெ., பேரவை ஒன்றிய செயலர் பதவிக்கு அறிவழகன் என்பவரையும ், திருவெறும்பூர் தொகுதி செயலர் பதவிக்கு அய்யம்பட்டி திரிசங்குவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பேரும், திருச்சி மண்டல அ.தி.மு.க., முன்னாள் பொறுப ்பாளரும், இளவரசியின் சம்மந்தியும், கடந்த டிசம்பரில், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட இன்ஜினியர் கலிய பெருமாளின் தீவிர ஆதரவாளர்கள்.
போயஸ் கார்டனுக்கு சசிகலாவும், இளவரசியும் மீண்டும் பிரவேசித்துள்ள நிலையில், � �ளவரசியின் சம்மந்தி கலியபெருமாளின் ஆதரவாளர்களுக்கு பதவி கிடைத்துள்ளது.
Post a Comment