இலங்கையின் வடக்குப் பகுதியான தமிழர்கள் வாழும் இடங்களில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற இந்திய எம். பிக்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கை சென்று திரும்பிய இந்திய குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்கள், யாழ்ப்பாணத்தில் சடங்குக்கும் சாவுக்கும் கூட ராணுவத்திடம் அனுமதி கேட்க வேண்டிய நிலை இ� ��ுக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் சொன்னோம். அவர் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு விட்டார் என்று வாய் ஜம்பம் பேசிக் கொண்டு வருகின்றனர்.
ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, வடக்கில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்ற சிங்களக் கொக்கரிப்பு வந்து � ��ிழுந்திருக்கிறது.
இவர்கள் போய் சந்தித்த அதே ராஜபக்சே அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர இது தொடர்பாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவிக்கையில், "இந்திய எம்.ப� �க்களிடம் நாடு முழுவதும் தான் ராணுவத்தின் பிரசன்னம் இருக்கிறது. தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் மட்டும் குவிக்கப்படவில்லை என்றுதான் ராஜபக்சே விளக்கம் அளித்தார்" என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய எம்.பிக்கள் கோருவதுபோல் வடக்குப் பகுதியில் இருந்து மட்டும் ராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்படி இலங்கை மூக்கறுக்கும் நிலையில் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ் எம்.பிக்கள் என்ன பதில் சொல்கிறார்களோ?
Post a Comment