ரஜினி, கமல் இணைந்து ந� ��ித்த படம் 'நினைத்தாலே இனிக்கும்'. நாயகியாக ஜெயப்பிரதா நடித்தார். கே.பாலச்சந்தர் இயக்கினார். 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது.
இப்படத்தில் இடம் பெற்ற 'நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தா ளாம்', 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆனந்த தாண்டவமோ', 'பாரதி கண்ணம்மா', 'இனிமை நிறைந்த உலகம் இருக்கு', 'சம்போ சிவசம்போ', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'எங்கேயும் எப்போதும்' போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.
இப்படத்திற்குப் பிறகு கமலையும், ரஜினியையும் ஒன்றாக நடிக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்ததும் பலிக்கவில்லை. எனவே 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
சிவாஜி நடித்த 'கர்ணன்' படம் சமீபத்தில் மறுரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓட� ��கிறது. எம்.ஜி.ஆர். படங்களும் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வகையில் 'நினைத்தாலே இனிக்கும்' படத்தையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
Post a Comment