News Update :
Home » » இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு புதிய கோரிக்கை: பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க அனுமதி வேண்டும்

இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு புதிய கோரிக்கை: பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க அனுமதி வேண்டும்

Penulis : karthik on Monday, 16 April 2012 | 01:20



width="200"


 
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இலட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போரின் போதும், போருக்கு பிறகும் ஈழத் தமிழர்களிடம் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. இதில் அவர்களது வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
 
முகாம்களில் அடைக்� ��ப்பட்ட ஈழத் தமிழர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். போர் முடிந்ததும் ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் பெற்றுத் தருவோம் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு தற்போது மவுனமாக உள்ளது.
 
இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை அரசு அதை தமிழர் பகுதியில் சிங்கள மயமாக்கலுக்கே பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள� � எழுந்ததால், இலங்கையில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்தது.
 
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 எம்.பி.க்கள் இந்த குழுவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து அ.தி. மு.க. சார்பில் ரபிபெர்னாட், தி.மு.க. சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என� �.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
 
இந்த நிலையில் எம்.பி.க்கள் குழு பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து இலங்கை செல்லும் குழுவில் இருந்து அ.தி. மு.க. விலகியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்க� ��யில், ராஜபக்சேயுடன் எம்.பி.க்கள் விருந்து சாப்பிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடன் எந்த விவாதத்துக்கும் ஏற்பாடு செய்யாததால் அ.தி.மு.க. குழுவில் இடம் பெறாது என்று கூறியிருந்தார்.
 
தற்போது தி.மு.க.வும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விலகிவிட்ட நிலையில், அந்த குழுவில் 14 எம்.பி.க்களே உள்ளனர்.
 
இவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கை செல்கிறார்கள். அவர்களிடம் நேற்று மத்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கி கூறினார்.
 
எம்.பி.க்கள் குழுவினர் ராஜபக்சே, பசில் ராஜபக்சே, பிரீஸ், ரணில் விக்கிரமசிங்கே பிள்ளையான் உள்பட சிலரை சந்தித்து பேசுவது பற ்றி தெரிவிக்கப்பட்டது. 21-ந் தேதி ராஜபக்சேயுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
 
தி.மு.க., அ.தி.மு.க. விலகிவிட்ட நிலையில், ராஜபக்சேயுடன் சிற்றுண்டி சாப்பிடும் விருந்து நிகழ்ச்சியை மாற்றவேண்டும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினார்கள்.
&nb sp;
ராஜபக்சேயுடன் 21-ந் தேதி காலை சாப்பிடுவதற்கு பதில் 20-ந் தேதி மாலை அவரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல 18-ந் தேதி இலங்கை ரெயில்வே திட்டப்பணிகளை பார்வையிட பயணத் திட்டத்தில் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு மாணிக்கன் தோட்ட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துபேச அனுமதிக்க வேண்டு� �் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.
 
பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் இதுபற்றி கூறுகையில், இலங்கையில் இந்தியா உதவியுடன் நடக்கும் சீரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம் என்றார்.
 
எம்.பி.க்கள் குழு நாளை முதல் 4 நாட்கள் இலங்க ையில் பல்வேறு இடங்களுக்கு செல்லவுள்ளனர். நாளை (17-ந் தேதி) காலை இலங்கை வெளியுறவு மந்திரி பிரீஸ், பொருளாதார வளர்ச்சி மந்திரி பசில் ராஜபக்சேயை சந்தித்து பேசுகிறார்கள்.
 
பசில் ராஜபக்சேயுடன் பேசி முடித்த பிறகு இந்திய எம்.பி.க்கள் இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளனர். அங்கு அவர்களுக்கு சபாநாயகர் சாமல் ராஜபக்சே மதிய விருந்து கொடுக்கிறார்.
 
நாளை பிற ்பகல் முதல் மாலை வரை தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகளை எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசுகிறார்கள். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் எம்.பி.க்கள் சந்தித்து பேச உள்ளனர்.
 
நாளை மறுநாள் (புதன்) காலை இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் கே.காந்தா காலை விருந்து கொடுக்கிறார். பிறக� � எம்.பி.க்கள் இலங்கை வடக்கு பகுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஈழத்தமிழ் எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார்கள். மனித உரிமை சங்கத்தினரையும் சந்திக்கிறார்கள்.
 
அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்குகிறார்கள். 19-ந் தேதி காங்கேசன் துறைமுகம் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்கள். அன்று எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கேயை சந்தித்து பேசுகிறார்கள்.
 
20-ந் தேதி இலங்கை கிழக்கு பகுதிகளை பார்வையிடுகிறார்கள். அங்கு மாகாண முதல்-மந்திரி பிள்ளையானை சந்தித்து பேசுகிறார்கள். 21-ந் தேதி சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சேயை சந்தித்து விட்டு எம்.பி.க்கள் குழு இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளது.
 
இந்திய எம்.பி.க்கள் குழுவினர், போர் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் ராஜபக்சேயின் தம்பி கோதபயாவை சந்தித்து பேசமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ஈழத் தமிழர்கள் முகாம்களை பார்வையிட எம்.பி.க்கள் குழு விடுத்துள்ள கோரிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்று மாலை தெரிய வரும்.






http://video-news-tamil.blogspot.com


Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger