இலங்கையில் தமிழர் பகுதியான கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தேச பிதா மாகாத்மா காந்தி சிலை சிங்கள வெறியர்களால் உடைத்து நொறுக்கப்பட்டது. மேலும் சாரணீய இயக்க நிறுவனர் பேடன்பவுல், தமிழ் அறிஞர்கள் சுவாமி விபுலானந்தா, பெரிய தம்பிபிள்ளை ஆகியோர் சிலைகளும் உடைக்கப்பட்டன.
ஆனால் இந்த நாச செயலில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அங்கு மீண்டும் காந்தி சிலையை நிறுவும்படி இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே. கந்தா அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி அமுங்கமாவிடம் வலியுறுத்தினார். � �தை தொடர்ந்து கிழக்கு மாகாண முதல்- மந்திரி சிவசேனாதுரை சந்திரகாந்தனுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
அதை தொடர்ந்து மட்டக்களப்பில் மீண்டும் காந்தி சிலை அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி சந்திரகாந்தன் வெளியிட்டார். மட்டக்களப்பில் உடைக்கப்பட்ட இடத்திலும், மற்றொரு இடத்திலும் காந்தி சிலை அமைக்கப்படும் என்றார். அது போன்று � ��டைக்கப்பட்ட தமிழ் அறிஞர்களின் சிலைகளும் மீண்டும் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.
http://video-news-tamil.blogspot.com
Post a Comment