சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் வீரபாண்டி ஆறுமுகம். முன்னாள் அமைச்சரான இவருக்கு சில நாட்களுக்க� �� முன்பு வாலிபர் ஒருவர் செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
அப்போது அவர் ராமஜெயத்திற்கு ஏற்பட்ட கதித்தான் உனக்கு ஏற்படும் என்றும், அடுத்த டார்கெட் நீதான் என்றும் கூறி போனை வைத்து விட்டார். இதுபற்றி முன்னாள் அமைச்சர் வீரபாண்ட� � ஆறுமுகம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கடந்த வாரம் சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பரிந்துரை செய்த பலரது பெயர் இல்லை என பரபரப்பாக பேசிக்கொண்டனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க.வில் இருந்தும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டார் என சேலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுபற்றி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணிக்கு புதியதாக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் என்னிடம் வந்து வாழ்த்து பெற்று சென்றனர். மேலும் பலர் தினமும் வந்து வாழ்த்து பெற்று செல்கிறார்கள். இந்த நிலையில் யாரோ சிலர் வேண்டும் என்றே நான் ராஜினாமா செய்து விட� �டதாக புரளி கிளப்புகிறார்கள். நான் எதற்கு ராஜினாமா செய்யப்போகிறேன். புரளி யார் யார் பரப்புகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment