தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், செயலர் மற்றும் பொருளாளரை, "சஸ்பெண்ட் செய்து போட்டி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள� �ளது. விதிமுறைகளுக்கு மாறாக கூட்டப்பட்ட இந்த கூட்ட முடிவுகள் செல்லாது என்றும், இதை, சட்டப்படி சந்திக்கவுள்ளதாகவும், தலைவர் சந்திரசேகர் தரப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில், தமிழ்த் திரைப்படத் தயாரி ப்பாளர் சங்கத்திற்கும், தொழிலாளர் அமைப்பான, "பெப்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவில், தயாரிப்பாளர் சங்கத்தில் அதிருப்தி குரல் எழுந்தது. அதிருப்தியாளர்கள் நேற்று போட்டி பொதுக்குழுவை கூட்டினர். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் என்பதால், போலீஸ் பாதுகாப்புடன் ப ோட்டி பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், சங்கத் தலைவர், எஸ்.ஏ., சந்திரசேகர், செயலர் பிஎல். தேனப்பன், பொருளாளர் தாணு ஆகியோரை, தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ஆறு மாதம், "சஸ்பெண்ட் செய்வதாகவும்< /span>, தொழிலாளர் சம்பளப் பிரச்னை குறித்து பேசுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு, இப்ராஹிம் ராவுத்தரை தலைவராக நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெளியேற்றத்தால் பரபரப்பு
போட்டி பொதுக்குழு கூட்டத்தில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சந்திரசேகருக்கு ஆதரவாகப் பேச முயன்ற தயாரிப்பாளர்கள் தமிழரசன், ரிஷிராஜ், ராஜசிம்மன் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சந்திரசேகர், செயலர் தேனப்பன், பொருளாளர் தாணு ஆகியோர் இல்லாமல் பொதுக்குழுவை நடத்துகின்றனர். செயற்குழு உறுப்பினர்களை ஏமாற்றி கடிதம் எழுதியுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினரல்லாத பலர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், எங்களது கருத்துக்களை தெரிவிக்க அனுமதி மறுத்து, எங்களை வெளியேற்றியுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சட்டப்படி சந்திப்போம்
தலைவர் உள்ளிட்டவர்கள் நீக்கம், போட்டி பொதுக்குழுவால் நடத்தப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் முற்றியுள்ளது. போட்டி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சந்திரசேகர் ஆதரவாளர்கள் தரப்பில் கூறியதாவது: தலைவர் உத்தரவில்லாமல் இந்தக் க� �ட்டம் நடந்துள்ளது. பொதுக்குழுக் கூட்டம் நடத்த 21 நாட்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை மீறி, கூட்டத்தை நடத்தியுள்ளனர். எனவே, இந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் செல்லாது. இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment