இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிக்கொண்டிருக்கும் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிகிற நிலையில் உள்ள து. லண்டனில் இளையராஜாவுடன் கம்போஸிங்கில் இருக்கிறார் கௌதம் மேனன்.
இந்நிலையில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் ஹீரோயின் சமந்தா படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். வழக்கமாக கௌதம் மேனன் தனது படங்களை மற்ற மொழிகளுக்கு டப்பிங் செய்யமாட்டார்.
அதேபோல் ஜீவா, சாமந்தா நடிக்கும் இந்த படத்தையும் தெலுங்கு மற்றும் மளையாலத்தில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அந்த மொழிகளிலும் சமந்தாவையே நடிக்க சொல்லியிருக்கிறார். ஆனால் நடிகை சமந்தா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
இதை பற்றி பேசிய சமந்தா " அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்குள் நிறைய திறமைகள் இருப்பது உண்மைதான். ஆனால் என்னால் கௌதம் சாரின் மற்ற படத்தில் நடிக்கமுடியவில்லை" என்று கூறியுள்ளார்.
சமந்தாவை நடிக்கக் கேட்ட கௌதம் மேனன் ஜீவாவை கேட்கவில்லை. காரணம் ஜீவாவிற்கு மற்ற மொழிகளில் மார்கெட் இல்லை. சமந்தா நடித்து வெளிவரும் "ஈகா' படம் வெற்றியடைந்தால் சமந்தா வீட்டு வாசலில் தெலுங்கு இயக்குனர்களின் கார்கள் வரிசையில் நிற்கும்.
home
Home
Post a Comment