முழுவேகத்தோடு இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார் சுந்தர் சி. பெரிய பட்ஜெட். பரபரப்பான நடிகர்கள் என வைத்து த� �் மனைவி குஷ்புவின் பேனரில் படங்களை உருவாக்குகிறார்.
இப்போது கலாட்டா @ மசாலா கபே என்ற நகைச்சுவைப் படத்தை எடுத்து வரகும் சுந்தர், அட� ��த்ததாக அதிரடி ஹீரோ விஷாலை வைத்து ஒரு நகைச்சுவைப் படத்தை எடுக்கிறார்.
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் கார்த்திகா. கோ படத்துக்குப் பிறகு அவர் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு அவர் ஒப்புக் கொண்டுள்ள படம் இது.
சமரன் படம் முடிந்ததும், இந்தப் புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்துவிடுவார் விஷால் என்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்ஸிகாவைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் விஷாலின் உயரத்தை மனதில் கொண்டு, கார்த்திகாவை இறுதி செய்துள்ளனர்.
Post a Comment