கதாநாயகிகள் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தி நடிகைகளின் சம்பளப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பிரியங்கா சோப்ராவை சமீபத்தில் ஒரு படத்துக்க� �� ரூ.9 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுதான் பெரிய சம்பளம் என்று கூறப்படுகிறது.
ஐஸ்வர்யாராய் எந்திரன் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி வாங்கினார் என செய்தி வெளியானது. தமிழ், தெலுங்கு பட கதாநாயகிகள் புதிய சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளனர். நயன்தாரா காதல் சர்ச்சைகளுக்கு முன் ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்கினார். தற்போது பிரபுதேவா வுடனான காதலை முறித்து மீண்டும் நடிக்க வந்துள்ள நிலையில் சம்பளத்தை ரூ.1 1/2 கோடியாக உயர்த்தி உள்ளார்.
நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த இலியானாவும் ரூ.1 1/2 கோடி சம்பளம் வாங்குகிறார். இதுவரை ரூ.90 லட்சம், ரூ.1 கோடி என சம்பளம் வாங்கிய திரிஷா தனது சம்பளத்தை ரூ.1 கோடியே 20 லட்சம் என உயர்த்தி உள்ளார்.
பிரியாமணி ரூ.30 லட்சம் வாங்குகிறார். அனுஷ்கா, காஜல்அகர்வால், தமன்னா, டாப்சி ஆகியோரின் சம்பளமும் ரூ.1 கோடியை தாண்டி உள்ளது.
இந்தியில் கரீனாகபூர் ரூ.6 கோடியும், கத்ரீனாகைப் ரூ.3 கோடியும், தீபிகா படுகோனே ரூ.2 1/2 கோடியும், வித்யாபாலன் ரூ.1 1/2 கோடியும் சம்பளம் பெறுகின்றனர்.
Post a Comment