கூடங்குளத்தில் அணு உலை செயல்பட இருப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை எனவும், தங்கள் மின் தேவைக்காக அணுசக்தியை பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை உள்ளது எனவும் இலங்கை கூறியுள்ளது.
ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவந்த மனித உரிமை மீறல் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததால்,கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்த பிரச்சினையை நாங்கள� �� எழுப்ப மாட்டோம் எனவும் இலங்கை அணுசக்திக் கழகம் கூறியுள்ளது.
மேலும் அண்டை நாடான இந்தியாவில் அணு உலை இருப்பதால், இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அணு உலை மற்றும் அவசர திட்டங்கள் குறித்த தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம ் எனவும் இலங்கை கூறியுள்ளது.
கூடங்குளம் அணு உலையால் கதிர்வீச்சு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அது தங்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறி கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு இலங்கை மு� ��லில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இலங்கை திடீரென தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.
Post a Comment