பள்ளிக்கூடங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச சீருடைகள் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங்கள் தொடங்கிய சில நாட்களில் இந்த சீருடைகள் வழங்கப்பட் டு வந்தன. இலவச சீருடையாக மாணவர்களுக்கு காக்கி நிற அரைக்கால் சட்டையும், வெள்ளை சட்டையும் வழங்கப்பட்டு வந்தது.
மாணவிகளுக்கு இளம் நீல நிறத்தில் பாவாடையும், வெள்ளை நிறத்தில் சட்டையும் வழங்கப்பட்டன. மேல்நிலை வகுப்புகளில் படித்த மாணவிகளுக்கு நீல நிற பாவாடை தாவணியும், வெள்ளை ரவிக்கையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும� �� அரசு அறிவித்து வழங்கும் சீருடைகளின் நிறம் பின்பற்றப்படவில்லை.
பச்சை, நீலம், காக்கி என்று ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ஒவ்வொரு நிறம் என்ற அடிப்படையில் மாணவ-மாணவிகள் சீருடைகள் அணிந்து வந்தனர். இதனால், அரசு வழங்கும் சீருடைகள் பெரும்பாலான மாணவர்களுக்கு வெறும் பெயரளவில் மட்டும்தான் வழங்கப்பட்டது. எனவே அனைத்து அரசு ப� �்ளிக்கூடங்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைகள் வழங்கவும், சீருடையின் நிறத்தை மாற்றவும் தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி வரும் கல்வி ஆண்டில் இருந்து அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் சீருடை நிறம் மாறுகிறது. அதுமட்டுமின்றி மாணவ-மாணவிகளுக்கு ஒரு ஜோடி சீருடை மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டுக்கு பதிலாக, ஒரு மாணவருக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்று முதல்&அ� �ைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
மேலும், அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் தனியார் பள்ளிக்கூட மாணவ-மாணவர்களைப்போல புதிய ஆடைகளை அணியும் வகையில் இலவச சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை மற்றும் மேல் சட்டையும், 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவிகளுக்கு பாவாடையும், சட்டையும் வழங்கப்படுகிறது.
6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை இனிமேல் கிடையாது. அதற்கு பதிலாக அனைத்து மாணவர்களுக்கும் முழுக்கால் சட்டை (பேண்ட்) வழங்கப்படும். அதுபோல் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் சுடிதார் மற்றும் துப்பட்டா வழங்கப்படுகிறது.
பாவாடை-தாவணியை விட சுடிதார் உடைதான் மாணவிகளுக்கு வசதியாக உள்ளது என்பதால் இந்த புதிய ஆடை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கான பேண்ட் மற்றும் அரைக்கால் சட்டைகள் மெரூன் நிறத்தில் தயார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மேல் சட்டை இளம் பிரவுன் நிறத்தில் உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சீருடை நிறத்தை மாற்ற அரசு முடிவு செய்ததும், பல்வேறு நிறங்களில் மாதிரி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பார்வைக்கு அனுப்பப்பட்டன. இதில் மெரூன் நிற துணிகள் எத்தனை முறை துவைத்தாலும் சாயம் போகாத அளவுக்கு தரமானவையாக இருந்தன. அதுமட்டுமின்றி சாய வகைகளில் கிலோவுக்கு ரூ.3 ஆயிரத்� ��ுக்கும் அதிகம் விலை கொண்ட ஒரே சாயம் மெரூனாக உள்ளது.
எனவே மாணவ-மாணவிகளுக்கு தரமான துணிகளை வழங்கும் வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மெரூன் நிறத்தை தேர்வு செய்ததுடன், அதற்கு மேட்ச்சாக இளம் பிரவுன் நிறத்தையும் தேர்ந்து எடுத்து உள்ளார். மாணவிகளுக்கு சுடிதார் பேண்ட் மற்றும் டாப்ஸ் மெரூன் நிறத்திலும், துப்பட்டா இளம் பிரவுன் நிறத்த ிலும் உற்பத்தி செய்ய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தமிழக அரசு ரூ.368 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. வரும் ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கும் போது மாணவ-மாணவிகளுக்கு முதல் கட்டமாக இலவச சீருடைகளை வழங்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே இலவச சீருடை உற்பத்தி பணியை முடுக்கி விட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் துணி நூல் பதனிடும் ஆலை தற்போது ஈரோட்டில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே குறிப்பிட்ட காலத்தில் சீருடைக்கான துணிகள் உற்பத்தி செய்வது என்பது இயலாது என்பதால், ஈரோடு தவிர ஐதராபாத், மாராட்டிய மாநிலம் இச்சல் கரன்ஜி மற்றும் மும்பையில் உள்ள சில தனியார் துணி நூல் பதனிடும் ஆலைகளிலும் சீருடை துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஈரோடு துணி நூல் பதனிடும் ஆலைக்கு கோ&ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் சீருடைக்கு தேவையான காடா துணிகள் பெறப்படுகின்றன. பின்னர் காடா துணிகள் சலவை (பிளீச்சிங்) செய்யப்பட்டு புதிய சீருடைக்கான நிறமேற்றம் (டையிங்) செய்யப்படுகின்றன. துணிகளுக்கு நிறமேற்றும் பணிகள் முடிவடைந்ததும் மாவட்ட வாரியாக பேக்கிங் செய்து மீண்டும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு சீருடை துணிகள் அனுப்பி வைக்கப்படும்.
ஈரோட்டில் ஒரு நாளைக்கு 45 ஆயிரம் மீட்டர் வீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிறுவனத்துக்கு விடுமுறை இன்றி மாதத்தில் அனைத்து நாட்களும் பணி நடந்து வருகிறது. பதனிடும் ஆலையின் மேலாளர் குருசாமி தலைமையில் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசின் தற்போதைய இலக்கான 120 லட்சம் மீட்டர் துணிகளை மே மாதம் 2-வது வாரத்துக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையின் நிர்வாக இயக்குநர் எம்.பழனிச்சாமி கூறும்போது, அரசு அறிவித்தபடி துணிகளை உற்பத்தி செய்து கொடுக்கும் வகையில் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் தரமான துணிகளை உற்பத்தி செய்து கொடுத்து விடுவோம் என்றார்.
துணிகள் அனைத்தும் சமூக நலத்துறை மூலம் மாவட்ட வாரியாக சென்றதும், ஆடைகளாக தைக்கப்படுகின்றன. இதற்காக தேசிய ஆடை வடிவமைப்பு மையத்தின் மூலம் மாதிரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு ஆடையை முதல்&அமைச்சர் ஜெயலலிதா தேர்வு செய்ததும் சீருடைகள் மாணவர்களின் உடல் அமைப்புக்கு ஏ� �்ப அந்த அந்த மாவட்டங்களில் தைக்கும் பணி தொடங்கும்.
தமிழக அரசின் முடிவால், அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் தனியார் பள்ளிக்கூடம் மாணவ-மாணவிகள் போல தரமான ஆடைகள் அணியும் வாய்ப்பினை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி இருக்கிறார்.
Post a Comment