News Update :
Home » » விவசாயிகள் பயனடைய கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு: ஜெயலலிதா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு Broiler production wage hike to benefit farmers

விவசாயிகள் பயனடைய கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு: ஜெயலலிதா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு Broiler production wage hike to benefit farmers

Penulis : Tamil on Friday 18 October 2013 | 22:48

விவசாயிகள் பயனடைய கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு: ஜெயலலிதா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு Broiler production wage hike to benefit farmers

சென்னை, அக் 19–

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டிலுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி நிறுவன உரிமையாளர்களால் தங்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக் கூலியை உயர்த்துதல், வருடத்திற்கு ஐந்து முறை கோழிக் குஞ்சுகள் வழங்குதல், வளர்ப்புக் கூலி கணக்கிடும் முறைகளைச் சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டி தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி கடந்த 21.9.2013 அன்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்திலுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் மேற்கண்ட தொழில்முறை பிரச்சனைகள் குறித்து கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் கறிக்கோழி நிறுவன உரிமையாளர் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, கறிக்கோழி வளர்ப்புக் கூலியாக தற்போது வழங்கப்பட்டு வரும் கூலியிலிருந்து 15 சதவீதம் உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டுமென்றும், ஜனவரி 2014 முதல் மேலும் 5 சதவீதம் உயர்த்தி மொத்தமாக 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கறிக்கோழி பராமரிப்பில் ஏற்படும் இதர பிரச்சனைகள் மற்றும் வளர்ப்பு கூலி கணக்கிடும் முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் சுமூக தீர்வு காணப்பட்டது.

கறிக்கோழிப் பண்ணை தொழிலில் நிலவி வந்த வளர்ப்புக் கூலி மற்றும் இதர பிரச்சனைகளுக்கு 40 ஆண்டு கால கறிக்கோழி பண்ணைத் தொழில் வரலாற்றிலேயே முதன் முறையாக அரசின் நேரடி நடவடிக்கை மூலம் ஏழை எளிய கிராம விவசாயிகள் உரிய பலன் பெறும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வழி காட்டுதல்கள் மற்றும் ஆணைகளின்படி கறிக்கோழி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடத்தப்பட்டு ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன் படிக்கையின்படி, கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சுமார் 14,120 கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளும் சுமார் 1,50,000 விவசாயத் தொழிலாளர்களும் உயர்த்தப்பட்ட வளர்ப்பு கூலியும் இதர பலன்களும் பெற்று பயனடைவார்கள்.

கறிக்கோழி பண்ணை தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தக்க வழிகாட்டுதலும் ஆணையும் வழங்கியமைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கறிக்கோழி நிறுவன உரிமையாளர் சங்க பிரதிநிதி ஆகியோர் சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

அப்போது, நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் உள்ள பிரச்சனைகளுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மட்டும் தான் இதில் தலையிட்டு சுமூக தீர்வு கண்டுள்ளது என்று தெரிவித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொண்டார்கள்.

அப்போது, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் மென்மேலும் வளர்ச்சி பெற்று, எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்படைய வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னய்யா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் முனைவர் விஜயகுமார், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் டாக்டர் பழனிச்சாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

shared via

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger