News Update :
Home » , » சென்னையில் கை, கால்களை முடக்கும் மர்ம காய்ச்சல் mystery fever spread in chennai area

சென்னையில் கை, கால்களை முடக்கும் மர்ம காய்ச்சல் mystery fever spread in chennai area

Penulis : Tamil on Tuesday 1 October 2013 | 03:41

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கொசு பெருக்கம் அதிகரித்து வருகிறது. மழைநீர் கால்வாய், ஆற்று பாலங்கள், மடைகள் போன்றவற்றை தூர்வாரும் பணியை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.
மழைக்காலத்தில் கொசுக்களால் உண்டாகும் நோய் தடுப்பு பணிகளையும் சுகாதாரத்துறை செய்து வருகிறது.
ஆனாலும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் டெங்கு, எலி காய்ச்சல் அதிகமாக உள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், சூளை, கொடுங்கையூர், மூலக்கடை, கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர் போன்ற இடங்களில் கொசு உற்பத்தி பெருகி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

காய்ச்சல், தலைபாரம், கை– கால்கள் வலியால் அவதிப்படுகிறார்கள். ரத்த பரிசோதனையில் எலி காய்ச்சல் (லெப்டோ பைரசிஸ்) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாதவரம் பால் பண்ணையில் உள்ள ரத்த பரிசோதனை மையத்தில் செய்யப்படும் பரிசோதனைகளில் பெரும்பாலானாவை லெப்டோ பைரசிஸ் பாசிட்வ் ஆக உள்ளது. மேலும், சிக்கன் குனியா அறிகுறிகள் போன்ற ஒரு விதமான புது காய்ச்சல் இப்போது பரவி வருகிறது.
இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால் விரல்கள் வீக்கம் ஏற்படுகின்றன. நடக்க முடியாமல் அவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் நிலை உள்ளது. சிக்குன்– குனியா நோய்க்கான அறிகுறிகள் இருந்த போதிலும், ரத்த பரிசோதனையில் சிக்குன் குனியா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிலர் சிகிச்சை பெறுகிறார்கள். 3 நாட்கள் வரை காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதன் பிறகுதான் கை, கால் வலி குறைகிறது.
இந்த காய்ச்சலால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறும் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், புதுப்புது அறிகுறிகளுடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வருவதால் உடனே ரத்த பரிசோதனை செய்கிறோம். அதில் வரும் அறிக்கையின்படி சிகிச்சை அளிக்கிறோம்.
ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்றி விடுகிறது. இது ஒரு வித்தியாசமான காய்ச்சலாக உள்ளது என்று கூறினார்.
மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வட சென்னை பகுதியில் மழைக்கால நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்.
கொசு மருந்து எல்லா தெருக்களிலும் அடிக்க வேண்டும். கழீவு நீர், மழை நீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger