என்னுடைய படத்தில் பஞ்ச் டயலாக் பேச மாட்டேன் என்று ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி, நான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ஹீரோ அவதாரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இசையமைப்பாளர் என்ற இந்த இடத்துக்கு வருவதற்காக நிறைய உழைத்திருக்கிறேன். நிறைய இழந்திருக்கிறேன்.. லாபம், நஷ்டம் எல்லாமும் பார்த்து வந்ததுதான் என் பயணமும். இந்த இடத்தை மதிக்கிறேன், ஆராதிக்கிறேன். இப்போ ஹீரோ என்பதும் அப்படி ஒரு முயற்சிதான். ஒளிப்பதிவாளராவும், இயக்குனராவும் திரும்பிப் பார்க்க வைச்ச ஜீவா சாரின், அசிஸ்டெண்ட் ஜீவா சங்கர்தான் படத்தை இயக்குகிறார். இந்த கதையை அவர் என்கிட்ட சொன்னப்போ "இந்த கதை எல்லோருக்கும் கிடைக்காது. எந்தக் காரணத்தைக் கொண்டும் மிஸ் பண்ணக் கூடாதுனு மனசு சொல்லுச்சு. மியூசிக், மியூசிக்னு ஓடிட்டிருக்க எனக்கும் ஒரு ரிலாக்ஸ் தேவைப்பட்டது. இப்போ முதல்கட்டப் படப்பிடிப்பு முடிஞ்சு அடுத்த கட்டத்துக்கு போயிருக்கு படம். மியூசிக்கும் நானே போட்டுருக்கேன். திருப்தியா இருக்குன்னு எல்லோரும் சொல்லிருக்காங்க. நான் நல்ல உழைப்பாளியான்னு படம் பார்த்துட்டு நீங்கதான் சொல்லணும், என்று கூறியுள்ளார்.
நான் படம் பற்றி கூறுகையில், இந்த படத்தில் வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கையில் எல்லாமும் இருந்தா ஒருத்தன் வேற என்ன பெரிசா தேடிடப் போறான்? யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாம அமைதியா வாழ ஆரம்பிச்சுடுவான். எதுவுமே கிடைக்காதபோதுதான் எல்லோருக்கும் பிரச்னை ஆரம்பிக்குது. ஏதாவது அடையுணுமேங்கிற ஆசையில, பதற்றத்தில எல்லாத் தப்புகளையும் செய்ய ஆரம்பிப்பான். அப்படி, வாழ்க்கைக்குள்ள சிக்கி கெட்டவனாகிற ஒருவன்தான் "நான். என்னை ஒரு மியூசிக் டைரக்டரா நினைச்சு படத்துக்கு வராதீங்க. படத்தில நான் அந்தக் கேரக்டராவேதான் தெரிவேன். பஞ்ச் டயலாக் பேச மாட்டேன், ஓபனிங் சாங் எல்லாம் ஆட மாட்டேன். என் பயணத்துக்கான அடுத்த எரிபொருள் இது, என்று கூறியிருக்கிறார்.
Post a Comment