பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாஜகவினர் பிச்சை ஏந்தும் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
கோவை பீலமேட்டில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கடைகள், பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் பிச்சை ஏந்தியபடி தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.
பிச்சை ஏந்தும் போராட்டத்தை ஒரு வாரம் தொடர்ந்து நடத்தி, அதில் கிடைக்கும் பணத்தை தமிழக அரசின் கஜானாவுக்கு அனுப்ப உள்ளதாக பாஜகவினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் நந்தக்குமார்,
பொதுமக்களிடம் பிச்சை எடுத்து, அந்தப் பணத்தை தமிழக அரசாங்கத்திற்கு அனுப்ப இப்போது நாங்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். எனவே ஒரு வார காலத்திற்கு கோவை மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் மடிப்பிச்சை ஏந்தி, அந்தப் பணத்தை அரசுக்கு அனுப்ப தயாராகி வருகின்றோம். பேருந்து கட்டண உயர்வால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.
Post a Comment