குழந்தையோடு ஐஸ்வர்யா ராய் இருப்பது போன்ற தோற்றத்தை தரும் ஒட்ட வைக்கப்பட்ட போலி புகைப்படங்கள் இன்டர்நெட்டில் உலா வருவதாக அமிதாப்பச்சன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஐஸ்வர்யாவின் மாமனார் அமிதாப் பச்சன் தனது பேத்தியின் அழகை டிவிட்டர் மூலம் வர்ணித்திருந்தார். ஐஸ்வர்யா சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே இன்டர்நெட்டில் ஐஸ்வர்யா ராய் குழந்தையுடன் இருப்பது போன்ற படங்கள் உலா வருகின்றன. இந்நிலையில் அமிதாப்பச்சன் இதனை மறுத்துள்ளார். ஐஸ்வர்யா ராய் குழந்தையோடு இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாகவும் அவை ஒட்ட வைக்கப்பட்ட போலி புகைப்படங்கள் என்று அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளார்.
இதனிடையே அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தைக்கு பேட்டிபி என செல்லப்பெயர் வைத்துள்ளனர். இந்த பெயரைச் சொல்லியே அவர்கள் குழந்தையை கொஞ்சுவதாக கூறப்படுகிறது. அமிதாப்பச்சன் பிக்பி என்ற அடைமொழியோடு குறிப்பிடப்படுகின்றார். அதற்கேற்ற வகையில் அவரது பேத்திக்கும் பேட்டிபி என செல்லமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Post a Comment