கேரள நீர் ஆதாரதுறை மந்திரியாக இருப்பவர் பி.ஜே. ஜோசப். இவர் புதிதாக படமாகும் மலையாள படமான ஹவுபாய் என்ற படத்தில் தமிழில் பின்னணி பாடல் ஒன்றை பாடுகிறார்.
இவருடன் இணைந்து பிரபல பின்னணி பாடகியான அனுராதா ஸ்ரீராமும் பாடுகிறார். மந்திரி பி.ஜே. ஜோசப் சிறு வயதிலேயே சங்கீதம் முறைப்படி கற்றவர். கல்லூரியில் படிக்கும்போது ஏராளமான பாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறார்.
1984ம் வருடம் சபரிமலை பாசம் என்ற மலையாள படத்தில் ஜேசுதாசுடன் இணைந்து பின்னணி பாடி உள்ளார். அதன்பின்பு முழு நேர அரசியல்வாதியாகி மந்திரி ஆகிவிட்டார். ஆனாலும் இசையின் மீதான ஆர்வம் தணியவில்லை. அவ்வப்போது மேடை கச்சேரியில் பாடி வந்தார். இப்போது 27 ஆண்டுகளுக்கு பின்பு சினிமாவில் பின்னணி பாடுகிறார். ஹவுபாய் படத்தில் மலேசிய தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் பாடலைதான் மந்திரி பி.ஜே. ஜோசப் பாட உள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு ஓடும் விமானத்தில் டி.வி. தொடர் நடிகை லட்சுமியை சில்மிஷம் செய்த வழக்கில் சிக்கியவர்தான் மந்திரி பி.ஜே.ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment