பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நயன்தாரா, திருமணத்துக்குப்பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றி முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழில், ஹரி இயக்கிய ஐயா படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படத்தின் வெற்றி காரணமாக சந்திரமுகி, குசேலன் என்று ரஜினி படங்களிலேயே நடிக்கும் அளவுக்கு ஜெட் வேகத்தில் முன்னேறினார். இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக வில்லு என்ற படத்தில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், புதிய பட வாய்ப்புகளை தவிர்த்தார் நயன்தாரா. கடைசியாக தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராமஜெயம் என்ற படம் கடந்த 18-ம் தேதி வெளியானது. இதில் சீதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நயன்.
இந்தநிலையில், மீண்டும் நயன்தாரா சினிமாவில் நடிப்பாரா? மாட்டாரா? என்று எழுந்த கேள்விகளுக்கு, நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளும்வரை நடிக்கும் எண்ணம் இல்லை. அதன்பிறகு நல்ல வாய்ப்புகள் வந்தால் மீண்டும் நடிப்பது பற்றி யோசித்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார் நயன்தாரா.
Post a Comment