பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் நாம் ஆண்கள் என்பதில் அர்த்தமே இல்லை மோடி விளாசல் Modi slams if no security to women we are not men
Penulis : Tamil on Friday, 30 August 2013 | 22:56
இந்தியாவில் வாழும் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் போதிய பாதுகாப்பு
இல்லையென்றால் நாமெல்லாம் ஆண்கள் என்று நம்மை அழைத்துக்கொள்வதில் அர்த்தமே
இல்லை என்று குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தோல்வியை மறைக்கிறார்கள் -உதயகுமார் kudankulam nuclear power plant udayakumar
பரபரப்பை ஏற்படுத்தி கூடங்குளம் அணுஉலை திட்ட தோல்வியை மறைக்கிறார்கள்: உதயகுமார் kudankulam nuclear power plant udayakumar
கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணுஉலையில் முதற்கட்டமாக 500 மெகா வாட் மின் உற்பத்தியைதொடங்க இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 14–ந்தேதி அனுமதிவழங்கியது. இதனையடுத்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முதல் அணு உலையில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறினார்.ஆனால் இதுவரை மின்உற்பத்தி தொடங்கப்படவில்லை. கூடங்குளம் அணுமின்திட்ட தோல்வியடைந்து விட்டதாகவும், அதை மறைக்க தீவிரவாதிகள் ஊடுருவி விட்டதாககூறி சோதனை நடத்தி வருவதாகவும் அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
ஆளும் வர்க்கம் தோல்வியை தளுவும்போது தீவிரவாதிகள் வருவதாக கடைசியில் துருப்பு சீட்டை பயன்படுத்துவார்கள். தீவிரவாதிகள் ஊடுருவுவதாக கடந்த சில நாட்களாக வதந்தியை பரப்புகிறார்கள். தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை தகவல் கொடுத்து விட்டது.
தோல்வியடைந்த கூடங்குளம் அணுஉலைதிட்டத்தை மூடிமறைக்கவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த 14–ந்தேதி மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி 18பேர் இறந்தனர். இந்த நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவில் இருந்து 400கோடி ரூபாயில் வாங்கப்பட்டது. பின்பு 450 கோடி ரூபாய் செலவில் பழுது நீக்கப்பட்டது.
கடந்த 14–ந்தேதி நீர்மூழ்கி கப்பலில் திட்டமிடாத பயணத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள. அந்தகப்பலை அணுஉலைநோக்கி செலுத்தி தீவிரவாத தாக்குதல் நடத்தி விட்டு, ரஷ்ய நிறுவனங்களின் உதவியுடன் வாங்கப்பட்ட அணுமின்நிலைய பொருட்களில் ஊழல் மற்றும் அணுஉலை ஓட்டமுடியாத அவமானம் ஆகியவற்றை மூடி மறைக்க, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது பழியை போட்டு, அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க திட்டமிட்டு இருப்பது எங்களுக்கு தெரியவந்துள்ளது.
கூடங்குளம் அணுஉலை ஆதரவாளர் சகாயகபூர் சகோதரர்கள் கடந்த24–ந்தேதி இரவு 10.45மணிக்கு இடிந்த கரையில் 4குண்டுகளை வீசி வெடிக்கச்செய்தனர். இது குறித்து நாங்கள் புகார் மனு எழுதி கூடங்குளம் போலீஸ் நிலையம், முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு, நெல்லை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நள்ளிரவே அனுப்பினோம்.
புகாரை பெற்றுக்கொண்ட கூடங்குளம் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் திரு முருகன் அதற்கான ரசீது வழங்கவில்லை. இந்நிலையில் மறுநாள் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 65பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதுகுறித்து நாங்கள் தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜத்திற்கு எங்களது புகார் மனுவுடன் விளக்க கடிதம் அனுப்பினோம். அதன்பேரில் அரை மனதாக சகாய கபூர் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அணுஉலைக்கு ஆதரவான கூத்தங்குளி கிராமத்தை சேர்ந்தவர்கள் இடிந்தகரை மற்றும் கூத்தங்குளி பகுதியில் தொடர்ந்து நாட்டு வெடி குண்டுகளை வீசி வருகின்றனர். அவர்களை தடுக்க முடியாத அரசு எந்த தீவிரவாதிகளை தடுத்து மக்களை காப்பாற்றப் போகிறது.
கூடங்குளம் அணுஉலை திட்டம் தோல்வியடைந்த திட்டம், அந்த திட்டத்தில் முறையற்ற பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்று அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த ஜூலை 11–ந்தேதி கூடங்குளம் அணு மின்நிலையத்தில் முதல் அணுஉலை இயங்கிவிட்டது என்றும், ஆகஸ்ட்மாத இறுதியில் 400மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்றும் வளாக இயக்குனர் சுந்தர் கூறியிருந்தார்.
ஆனால் அங்கு இதுவரை அந்த மின்சாரமும் உற்பத்தி செய்யப்படவில்லை. ரஷ்ய நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்த விமானம் தாங்கும் போர் கப்பலான அட்மிரல் போஸ்கோ, மிக் ரக விமானம், ரக்ஷத் நீர்மூழ்கி கப்பல் , அணுஉலை திட்டம் ஆகியவற்றிற்கு நிதி கொடுத்துவிட்டு, நமது நாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார்கள். அதை மூடி மறைக்கவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்
பெட்ரோல் விலையையும் ரூ. 5 அதிகரிக்க ஆலோசனை Petrol Price rs 5 to increase consultation
Penulis : Tamil on Wednesday, 28 August 2013 | 22:08
Wednesday, 28 August 2013
எண்ணை நிறுவனங்களுக்கு கடும் இழப்பு: பெட்ரோல் விலையையும் ரூ. 5 அதிகரிக்க ஆலோசனை Heavy loss of oil companies Petrol Price rs 5 to increase consultation
சிரியா மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற
சூழ்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்த படி உள்ளது.
நேற்று முன்தினம் ஒரு பேரல் கச்சா எண்ணை 116.27 டாலராக இருந்தது. நேற்று
அது 118.04 டாலராக உயர்ந்தது.
இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி
அடைந்து வருகிறது.
இத்தகைய காரணங்களால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு
அதிகரித்தப்படி உள்ளது.
தற்போது எண்ணை நிறுவனங்கள் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.10.22, மண்
எண்ணையில் லிட்டருக்கு ரூ.33.54, சமையல் கியாஸ் விற்பனையில் சிலிண்டருக்கு
ரூ.412 இழப்பை சந்தித்து வருகின்றன.
அந்த வகையில் தினமும் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.389 கோடி இழப்பு
ஏற்படுகிறது.
எனவே டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தா விட்டால், இந்த ஆண்டு எண்ணை
நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட டீசல் விலையை ரூ.5 முதல்
ரூ.6 வரை உயர்த்த ஆலோசனை நடந்து வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்)
6-ந்தேதி பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் டீசல் விலை உயர்வு பற்றிய
அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல் விலையையும் உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி
வருகிறது. செப்டம்பர் முதல் 2 வாரங்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5
உயர்த்தாவிட்டால் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு மீட்க முடியாத
அளவுக்கு போய் விடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே பெட்ரோல் விலையையும் லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தலாமா என்று மத்திய அரசின் பல்வேறு அமைச்சக அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டன.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், அது அத்தியாவசியப்
பொருட்களின் விலையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு
கருதுகிறது.
எனவே ஒரே நேரத்தில் ஒரேயடியாக பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் உயர்த்த
மத்திய அரசிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு
ஓரளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோக்களுக்கு புதிய கட்டண அட்டை நாளை முதல் வழங்கப்படுகிறது running 70 thousand autos new charge card
சென்னையில் ஓடும் 70 ஆயிரம் ஆட்டோக்களுக்கு புதிய கட்டண அட்டை நாளை முதல் வழங்கப்படுகிறது running 70 thousand autos new charge card
சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறைந்தபட்சமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணமும், அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதம் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆட்டோ கட்டணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்த உள்ளன. ஜி.பி.எஸ். கருவியுடன் டிஜிட்டல் மீட்டர் அரசு சார்பில் ஒவ்வொரு ஆட்டோவிற்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தற்போதுள்ள மீட்டரை திருத்தம் செய்ய 45 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15–ந்தேதிக்குள் சென்னையில் உள்ள அனைத்து ஆட்டோக்களிலும் புதிய கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையில் புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தற்போதைய மீட்டரில் புதிய கட்டணம் திருத்தம் செய்யும் வரை அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக புதிய கட்டணம் விவரங்கள் அடங்கிய அட்டை அச்சிடப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே உள்ள பழைய கட்டணம், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டணங்கள் கிலோ மீட்டர் வீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அட்டை நாளை அல்லது நாளை மறுநாள் முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
அங்கீகாரம் பெற்ற ஆட்டோக்களுக்கு மட்டும் இந்த கட்டண அட்டை கொடுக்கப்படும். இந்த கட்டண அட்டை ஆட்டோ டிரைவரிடம் கொடுக்கப்படமாட்டாது. உரிமையாளர்களிடம் மட்டுமே வழங்கப்படும்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:–
புதிய ஆட்டோ கட்டணம் கடந்த 25–ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் இடையே எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக புதிய கட்டண விவரம் அடங்கிய அட்டை வழங்கப்பட உள்ளது.
இந்த அட்டையில் ஆட்டோ உரிமையாளர் போட்டோ ஒட்டப்படும், அவரிடம் மட்டுமே அட்டை வினியோகம் செய்யப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட்டு பெற வேண்டும்.
கட்டண அட்டையை பயணிகள் பார்வைக்கு தெரியும் வகையில் தொங்க விடவோ, ஒட்டவோ செய்ய வேண்டும். கட்டண அட்டை தயாராகி விட்டது. நாளை (வியாழக்கிழமை) அல்லது வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும்.
பழைய மீட்டரில் உள்ள கட்டணமும் இந்த அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. பழைய கட்டணப்படி கிலோ மீட்டருக்கு எவ்வளவு வருகிறதோ அதன் அடிப்படையில் புதிய கட்டணம் வசூலிக்கப்படும். அதனால் தான் அட்டையில் இரண்டு கட்டணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டணத்தை விட புதிய கட்டணம் கூடுதலாக இருக்கும். நாம் எத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்கிறோம் என்பதை அருகில் உள்ள புதிய கட்ட ணத்தோடு ஒப்பிட்டு வழங்க வேண்டும்.
ஆட்டோக்களின் உரிமையாளர்களிடம் மட்டுமே கட்டண அட்டை கொடுப்பதால் அவர்களுக்கு அதன் முழு விவரங்கள் தெரிய வரும். டிரைவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு தரக் கூடாது என்பதற்காக இதை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போனில் விளம்பர எஸ்.எம்.எஸ். அனுப்பினால் ரூ.5000 அபராதம் cellphone customer without specifications advertising SMS rs 5000 penalty
Penulis : Tamil on Saturday, 24 August 2013 | 04:58
Saturday, 24 August 2013
செல்போன்களில் தேவையற்ற வர்த்தக அழைப்புகளையும், குறுஞ் செய்திகளையும் (எஸ்.எம்.எஸ்.)களையும் அனுப்பக்கூடாது. வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் இவற்றை அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ‘டிராய்’ அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஜயகாந்த் பிறந்தநாள் உறுதிமொழி Vijayakanth birthday promising to help to people
Penulis : Tamil on Wednesday, 21 August 2013 | 22:14
Wednesday, 21 August 2013
ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை இயன்றதை செய்வோம்.
இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு செய்து வருகிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள் ஆகும். திரையுலகில் இருந்த காலந்தொட்டு இன்றுவரை ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்த வண்ணம் உள்ளேன்.
கடந்த ஆண்டு மக்களுக்காக மக்கள் பணி என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினேன். கடந்த காலங்களில் வீட்டு மனை நிலங்கள் இலவசமாகவும், முதியோர் இல்லங்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கினேன்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இலவச திருமண மண்டபமும், பெண் சிசுக் கொலையை தடுத்திட பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தின் மூலம் சுமார் 500 பெண் குழந்தைகளுக்கு, அவர்களின் திருமண வயதில் தலா ரூபாய் இரண்டு லட்சம் கிடைக்கும் வகையில் வைப்பு நிதியாகவும், லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 60 இடங்களில், 600 கணினிகள் கொண்ட இலவச கணினி பயிற்சி மையமும் அமைக்கப்பட்டது.
ஏழைத் தாய்மார்கள் சுய தொழில் செய்வதற்காக 1300 தையல் இயந்திரங்களும், ஏழை சகோதரிகளின் திருமணத்திற்கு உதவிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், காது கேட்கும் கருவிகளும், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகளும், மாணவ- மாணவிகளுக்கு கல்வி கட்டணங்களும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகளும், நோட்டுப் புத்தகங்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நான் வழங்கி வருகிறேன்.
இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளில் சுமார் 100 பேரை தேர்வு செய்து அவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனங்களை அவர்களுக்கு வழங்க இருக்கிறேன்.
மேலும் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு உதவியாக ரூபாய் 50 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்குவதைப் போல் இந்த ஆண்டும் வழங்க உள்ளேன். தே.மு.தி.க.வின் அமைப்பு ரீதியான 59 மாவட்டங்களிலும் இது போன்று பல நல உதவிகளை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல்வேறு இன்னல்களையும், வழக்குகளையும் சந்தித்து வருகின்ற நாம், நமக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக்கி மக்களுக்கு தொண்டு செய்வோம் என்று இந்த பிறந்தநாளில் உறுதி கூறுகிறேன்.
ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அமைய நானும், என்னை சேர்ந்த கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எனது பிறந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழ்நாட்டு அரசியலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மலர்ந்துள்ளது.
அதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம் Director Cheran daughter Damini parents consent
இரவு உடையுடன் விமானத்தில் பயணிக்க வந்த சவுதி ஆசாமி Saudi men barred from boarding flight for wearing night gowns
Penulis : Tamil on Monday, 19 August 2013 | 01:11
Monday, 19 August 2013
திகைத்துப்போன பயணிகள், நாங்கள் அவசரமாக தபூக் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்று அதிகாரியிடம் தெரிவித்தனர்.
கட்டாயமாக இந்த விமானத்தில் தான் பயணிக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் நீங்கள் அணிந்திருக்கும் இரவு உடைகளை கழற்றிவிட்டு, வேறு நல்ல உடையை அணிந்து வாருங்கள். அப்போதுதான் விமானத்தில் பயணிக்க அனுமதிப்போம் என்று அந்த அதிகாரி திட்டவட்டமாக கூறினார்.
இதனையடுத்து, மறைவான பகுதிக்கு சென்ற அவர்கள் இருவரும் தங்கள் பெட்டிகளில் இருந்த மாற்றுடைகளை அணிந்து வந்து விமானத்தில் ஏறினர்.
இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து, விமான நிலைய அதிகாரியை கண்டித்து கண்டனக் குரல்கள் மேலோங்கி வருகின்றனர்.
இதுபற்றி டுவிட்டர் , பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த சிலர், விமான நிலைய அதிகாரியின் போக்கு தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
ஓடும் ரெயிலில் 7 வயது சிறுமி கற்பழிப்பு : குற்றவாளியை பற்றிய தகவல் அளித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் 7 year girl molested in moving train
Penulis : Tamil on Sunday, 11 August 2013 | 18:08
Sunday, 11 August 2013
7 வயது சிறுமியை ஓடும் ரெயிலில்
கற்பழித்த காமுகனை பற்றிய தகவல்
அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம்
வழங்குவதாக ரெயில்வே நிர்வாகம்
அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், பக்த கன்வாராம் மார்க்கெட்
பகுதியில் 7 வயது சிறுமி ரத்தம் வடிந்த
நிலையில் மயங்கி கிடப்பதாக
கொத்வாலி போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, சம்பவ
இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார்
சிறுமியை மீட்டு சத்தீஸ்கர் மருத்துவ
அறிவியல் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனையில் அந்த
சிறுமி கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மயக்கம் தெளிந்த சிறுமி போலீசாரிடம் அளித்த
வாக்குமூலத்தில் ஹவுரா -
குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த நான்
கழிவறைக்கு சென்றபோது ஒருவன்
என்னை பின்தொடர்ந்து வந்து கழிவறைக்குள்
வைத்து கற்பழித்தான். பிலாஸ்பூர் ரெயில்
நிலையத்தில் எனக்கு 10
ரூபாயை தந்து இறக்கி விட்டான்
என்று கூறினாள்.
இதுதொடர்பான வழக்கு தற்போது பிலாஸ்பூர்
ரெயில்வே நிலைய
போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிறுமியின் பெற்றோரை கண்டுபிடிக்கும்
முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள
ரெயில்வே போலீசார், 7
வயது சிறுமியை இந்த கதிக்குள்ளாக்கிய
காமுகனை பற்றிய தகவல்
அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம்
வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும்
சிறுமியின் நிலைமை அபாய கட்டத்தில்
உள்ளதாகவும் தெரிவித்த ரெயில்வே போலீசார்
ஹவுரா - குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலின்
சி.சி.டி.வி. பதிவுகளையும்
ஆய்வு செய்து வருகின்றனர்.
நயன்தாரா வின் மேனி பஞ்சர்
இடைவிடாத படப்பிடிப்பு. சுற்றியிருக்கும்
லைட்களின் வெப்பம். கொஞ்சமாக
டயர்டாகிவிட்டார் தாடி தந்த காதல்
தோல்வியால் துவண்டு எழுந்த
கற்புகரசி நடிகை. நம்மாட்கள் அதனை,
நடிகைக்கு தோலில் பிரச்சனை,
சமர்த்து நடிகையைப் போல
சருமத்துக்கு சிகிச்சை எடுக்கிறார் என
எழுதிவிட்டனர்.
இத்தனைக்கும் நடிகை படப்பிடிப்பில்
தொடர்ந்து பங்கு கொண்டுதான் இருக்கிறாராம்.
அப்புறம் எப்படி இந்த
மாதிரி ஒரு செய்தி வெளியானது? விஷயம்
கேள்விப்பட்ட நடிகை, மேனி கொதிக்கும்
அளவுக்கு கோபப்பட்டிருக்கிறார்.
நடிகை கோபப்பட்டால் மேலும் அழகாக
இருப்பார். அதற்காக
இப்படியா அடிக்கடி கோபப்படுத்திப் பார்ப்பது
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: பயஸ் ஸ்டெபானிக் ஜோடி வெளியேறியது Rogers cup tennis paes stepanek jodi exited
Penulis : Tamil on Friday, 9 August 2013 | 07:02
Friday, 9 August 2013
கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இன்று ஆடவர் இரட்டையர் 2-ம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 4-ம் தரநிலை ஜோடியான லியாண்டர் பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி, இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே-கோலின் பிளெமிங் ஜோடியை எதிர்கொண்டது.
இந்திய-செக் குடியரசு ஜோடியான பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி, 3-6, 3-6 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
போபண்ணா-ஆண்ட்ரே பெக்மேன் ஜோடி ஏற்கனவே வெளியேறியது. சீனாவின் ஜீ ஜெங்குடன் இணைந்து விளையாடிய சானியா மிர்சா, 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.
பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை காக்க அதிநவீன ஆயுதம்
Penulis : Tamil on Wednesday, 7 August 2013 | 21:33
Wednesday, 7 August 2013
அசாம் மாநிலத்தில்தான் உலகிலேயே அதிக காரம் உள்ள மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இந்த மிளகாய்ச்சாறில் இருந்துதான் இந்த தெளிப்பான் (ஸ்பிரே) உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடக்கக்கூடிய தருணத்தில் இந்த தெளிப்பானை எதிர் தரப்பினர் மீது தெளிக்க ஆயுதமாகப் பயன்படுத்தலாம்.
டெல்லி மேல்-சபையில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தபோது இந்த தகவலை ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். இந்த தெளிப்பான் சோதனைகளில் பயன்படுத்தப்பட்டபின்னர், டி.ஆர்.டி.ஓ. அமைப்பே இதை பிரபலப்படுத்தும் எனவும் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
ஆடி அமாவாசையில் திதி
Penulis : Tamil on Monday, 5 August 2013 | 22:03
Monday, 5 August 2013
பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி வைகோ கைது
Penulis : Tamil on Friday, 2 August 2013 | 05:33
Friday, 2 August 2013
அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., தமிழர் வாழ்வுரிமை சார்பில் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சி
விஜய், அமலா பால், சத்யராஜ் நடிப்பில் தலைவா
விஜய், அமலா பால், சத்யராஜ் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.‘ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
படத்தை இந்த மாதத்தில் வெளியிட எண்ணி விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், ரிலீஸ் தேதியை மட்டும் தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று நினைத்தனர். இந்நிலையில் படம் தணிக்கை குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாகக் கூறி படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க முடிவு செய்தனர்.
யு/ஏ சான்றிதழ் பெற்றால் படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு பெறுவது கஷ்டமாகிவிடும் என்பதால் இப்படம் ரிவைசிங் கமிட்டிக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த கமிட்டி உறுப்பினர்கள் சில இடங்களை கட் பண்ணுமாறு சொல்லி விட்டு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதனால் தலைவா படம் ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
மதுரை மாணவி நந்தினி நள்ளிரவில் கைது
Penulis : Tamil on Thursday, 1 August 2013 | 00:04
Thursday, 1 August 2013
பூரண மதுவிலக்கு கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கல்லூரி முன்பு கடந்த 29–ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் அன்று இரவு 7 மணிக்கு போலீசார் நந்தினியை கைது செய்து விடுவித்தனர். அதன் பிறகு இரவு 10.30 மணிக்கு சட்டக்கல்லூரி வந்த நந்தினி மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு ...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...