News Update :
Home » , » ஓடும் ரெயிலில் 7 வயது சிறுமி கற்பழிப்பு : குற்றவாளியை பற்றிய தகவல் அளித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் 7 year girl molested in moving train

ஓடும் ரெயிலில் 7 வயது சிறுமி கற்பழிப்பு : குற்றவாளியை பற்றிய தகவல் அளித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் 7 year girl molested in moving train

Penulis : Tamil on Sunday, 11 August 2013 | 18:08

7 வயது சிறுமியை ஓடும் ரெயிலில்
கற்பழித்த காமுகனை பற்றிய தகவல்
அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம்
வழங்குவதாக ரெயில்வே நிர்வாகம்
அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், பக்த கன்வாராம் மார்க்கெட்
பகுதியில் 7 வயது சிறுமி ரத்தம் வடிந்த
நிலையில் மயங்கி கிடப்பதாக
கொத்வாலி போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, சம்பவ
இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார்
சிறுமியை மீட்டு சத்தீஸ்கர் மருத்துவ
அறிவியல் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனையில் அந்த
சிறுமி கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மயக்கம் தெளிந்த சிறுமி போலீசாரிடம் அளித்த
வாக்குமூலத்தில் ஹவுரா -
குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த நான்
கழிவறைக்கு சென்றபோது ஒருவன்
என்னை பின்தொடர்ந்து வந்து கழிவறைக்குள்
வைத்து கற்பழித்தான். பிலாஸ்பூர் ரெயில்
நிலையத்தில் எனக்கு 10
ரூபாயை தந்து இறக்கி விட்டான்
என்று கூறினாள்.
இதுதொடர்பான வழக்கு தற்போது பிலாஸ்பூர்
ரெயில்வே நிலைய
போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிறுமியின் பெற்றோரை கண்டுபிடிக்கும்
முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள
ரெயில்வே போலீசார், 7
வயது சிறுமியை இந்த கதிக்குள்ளாக்கிய
காமுகனை பற்றிய தகவல்
அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம்
வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும்
சிறுமியின் நிலைமை அபாய கட்டத்தில்
உள்ளதாகவும் தெரிவித்த ரெயில்வே போலீசார்
ஹவுரா - குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலின்
சி.சி.டி.வி. பதிவுகளையும்
ஆய்வு செய்து வருகின்றனர்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger