சவுதி அரேபியாவை சேர்ந்த இருவர் மதீனா நகரில் இருந்து தபூக் நகரம் செல்ல விமான நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களை கவனித்த விமான நிலைய மக்கள் தொடர்வு அதிகாரி, இருவரையும் விமானத்தில் ஏற்றக்கூடாது என
ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
திகைத்துப்போன பயணிகள், நாங்கள் அவசரமாக தபூக் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்று அதிகாரியிடம் தெரிவித்தனர்.
கட்டாயமாக இந்த விமானத்தில் தான் பயணிக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் நீங்கள் அணிந்திருக்கும் இரவு உடைகளை கழற்றிவிட்டு, வேறு நல்ல உடையை அணிந்து வாருங்கள். அப்போதுதான் விமானத்தில் பயணிக்க அனுமதிப்போம் என்று அந்த அதிகாரி திட்டவட்டமாக கூறினார்.
இதனையடுத்து, மறைவான பகுதிக்கு சென்ற அவர்கள் இருவரும் தங்கள் பெட்டிகளில் இருந்த மாற்றுடைகளை அணிந்து வந்து விமானத்தில் ஏறினர்.
இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து, விமான நிலைய அதிகாரியை கண்டித்து கண்டனக் குரல்கள் மேலோங்கி வருகின்றனர்.
இதுபற்றி டுவிட்டர் , பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த சிலர், விமான நிலைய அதிகாரியின் போக்கு தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment