News Update :
Home » » பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் நாம் ஆண்கள் என்பதில் அர்த்தமே இல்லை மோடி விளாசல் Modi slams if no security to women we are not men

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் நாம் ஆண்கள் என்பதில் அர்த்தமே இல்லை மோடி விளாசல் Modi slams if no security to women we are not men

Penulis : Tamil on Friday, 30 August 2013 | 22:56

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் நாம் ஆண்கள் என்பதில் அர்த்தமே இல்லை : மோடி விளாசல் Modi slams if no security to women we are not men 

 

இந்தியாவில் வாழும் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லையென்றால் நாமெல்லாம் ஆண்கள் என்று நம்மை அழைத்துக்கொள்வதில் அர்த்தமே இல்லை என்று குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சோட்டா உதய்பூர் என்ற மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதற்காக அம்மாவட்ட மக்கள் மோடிக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:-

சீதையும், சாவித்ரியும் வாழ்ந்த நமது இந்திய நாட்டின் தற்போதைய சமூக அமைப்பில் நமது தாய்மார்கள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு என்பது தற்போது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

நான் அரசியலுக்காக இதை கூறவில்லை. நாம் வீட்டில் இல்லாதபோது நமது சகோதரிகள் தனியாக தங்கியிருக்கும் வேளைகளில் அவர்களால் பயமின்றி அமைதியாக இருக்க முடிவதில்லையே... இது ஏன்?

இதே நிலை நீடித்தால், ஆண்கள் என்று அழைத்துக்கொள்ளும் உரிமை நமக்கு இல்லை. கணவன் என்று அழைத்துக்கொள்ளவும் நமக்கு உரிமை இல்லை. அவமானத்தால் நாம் செத்துப் போக வேண்டும்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு கேவலமான புத்தி படைத்த சிலர் குறை கூறுகின்றனர். இவற்றுக்கெல்லாம் பெண்கள் காரணமல்ல. ஆண்களுக்குள் இருக்கும் கேவலமான புத்திதான் காரணம்.

இதைப்போன்ற கேவலமான எண்ணங்களை எதிர்த்து போராட இந்த சமூகம் முன்வர வேண்டும்.

பெண்களை தவறாக சித்தரிப்பதும், பயன்படுத்துவதும் இந்த சமூகத்தின் மீது படிந்துள்ள நீங்காத கரையாக தொடர்ந்துக் கொண்டே வருகிறது. இந்த கரையை நீக்க நாம் கூட்டுப் பொறுப்புடன் போராடியே தீர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger