மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (‘டிராய்’) செயலாளர்
ராஜீவ் அகர்வால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:–
செல்போன்களில் தேவையற்ற வர்த்தக அழைப்புகளையும், குறுஞ் செய்திகளையும் (எஸ்.எம்.எஸ்.)களையும் அனுப்பக்கூடாது. வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் இவற்றை அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ‘டிராய்’ அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிராய் அமைப்பிடம் பதிவு செய்யாத டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களும், பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் தேவையற்ற அழைப்புகளையும் அனுப்புகிறார்கள். வாடிக்கையாளரின் விருப்பம் இல்லாமல் செல்போன் சேவை நிறுவனங்கள் இவற்றை அனுமதிக்கக்கூடாது.
‘டிராய்’ அமைப்பு வகுத்துள்ள ஒழுங்கு முறைப்படி வர்த்தக அமைப்பின் விளம்பர எஸ்.எம்.எஸ்., அழைப்பு ஆகியவற்றை பெற விருப்பம் இல்லை என்று பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் தேவையற்ற அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.களும் வருவதாக புகார்கள் வருகின்றன.
மாதந்தோறும் இது போன்ற 46 ஆயிரம் புகார்கள் வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களின் விருப்பத்துடன் வழங்கப்படும் தொலைத் தொடர்பு வர்த்தக சேவை ஒழுங்கு முறை விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வர்த்தக எஸ்.எம்.எஸ். தகவல்களை பெற விரும்பவில்லை என்று பதிவு செய்த செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள், காப்பீடு, கட்டுமான நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் ரீதியான எஸ்.எம்.எஸ்.களையோ, அழைப்புகளையோ அனுப்பக்கூடாது. அந்த நிறுவனங்கள் சார்பிலும் யாரும் செயல்படக் கூடாது.
இதை மீறி அவ்வாறு செயல்பட்டால், வாடிக்கையாளர்களின் அழைப்பில் இடம் பெறும் விளம்பரதாரர் நிறுவனங்களின் தொலைத் தொடர்பு சேவை அனைத்தும் துண்டிக்கப்படும். இது தவிர குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு செல்போன் சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு புகார் ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு ராஜீவ் அகர்வால் கூறினார்.

Post a Comment