News Update :
Home » , , » பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி வைகோ கைது

பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி வைகோ கைது

Penulis : Tamil on Friday, 2 August 2013 | 05:33

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஒலைக்குடியில் ரூ.600 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெல் பாய்லர் துணை தொழிற்சாலை திறப்பு விழா இன்று நடந்தது. இதைத் திறந்து வைக்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை 11.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார்.
அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., தமிழர் வாழ்வுரிமை சார்பில் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சி
நிறுவனத்தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, சிப்பிபாறை ரவிச்சந்திரன், தமிழர் வாழ்வுரிமை கட்சி மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் காவேரி, அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காமராஜ் மற்றும் ஏராளமானோர் கட்சி கொடிகள் ஏந்தியும், கறுப்பு கொடிகள் ஏந்தியும், கறுப்பு பலுன்களை பறக்க விட்டபடியும் திருச்சி விமான நிலையம் நோக்கி புதுக்கோட்டை ரோட்டில் சென்றனர்.
அவர்களை ஜெயில் கார்னர் அருகே மாநகர் போலீஸ் துணை கமிஷனர் அபிநவ்குமார் தலை மையிலான போலீசார் கயிறு கட்டி தடுத்தனர். போராட்டக் காரர்கள் செல்ல முடியாதபடி ரோட்டில் பஸ்களை நிறுத்தியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து வைகோ வேனில் நின்றபடி கண்டன கோஷம் எழுப்பினார். இலங்கையில் ஈழ தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு துணை போன இந்திய அரசை கண்டிக்கிறோம். பிரதமர் மன்மோகன்சிங் திரும்பி போக வேண்டும். 578 தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவத்துக்கு துணை போகும் இந்திய அரசை கண்டிக்கிறோம். பிரதமர் மன்மோகன்சிங்கை கண்டிக்கிறோம். மலரட்டும் மலரட்டும் ஈழதமிழகம் மலரட்டும் என்று பிரதமர், ராஜபக்சேவுக்கு எதிராகவும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பபட்டது.
ம.தி.மு.க. கொண்டு வந்திருந்த கறுப்பு பலுன்களை புதுக்கோட்டை ரோட்டில் பிறக்க விட்டனர். இதனால் திருச்சி– புதுக்கோட்டை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு போலீசார் வைகோ, வேல்முருகன் உள்பட 500–க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
ம.தி.மு.க. திருச்சி மாவட்ட செயலாளர் மலர்மன்னன், துணை செயலாளர் வெல்லமண்டி சோமு, மாநகராட்சி கவுன்சிலர்கள் முஸ்தபா, ராமமூர்த்தி, கதிரவன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதே போன்று தமிழர் வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த கருப்பு சரவணன், மாநில துணை பொதுச் செயலாளர்கள் மனோகரன், தமிழ்நேசன், சத்தியமூர்த்தி, சேலம் வெங்கடேஷ், கரூர் ராஜ்குமார், சுபாஷ், வி.வி.ராஜா கவுண்டர் உள்பட ஏராளமானோர் கைது செய்தனர். பெரியார் திராவிட கழகம் சார்பில் கோவை ராமகிருஷ்ணன் தலை மையில் கட்சியினர் கைதாகினர்.
இதேபோன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விமான நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரபு, விஜி, சந்தோஷ், பிரேம், ஆனந்த் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் போலீஸ் வேனில் மொத்தம் 700 பேர் ஏற்றப்பட்டு அங்குள்ள திருமணமண்டபத்திற்கு கொண்டு சென்று அடைக் கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே 11.05 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து இறங்கி பிரதமர் மன்மோகன்சிங் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருமயம் புறப்பட்டு சென்றார். விமான நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger