ஒடிசா மாநிலத்தில் கடந்� � மார்ச் மாதம் 24-ந் தேதி ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். எம்.எல்.ஏ.வை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்கள் 29 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் முதலில் நிபந்தனை விதித்தனர். பின்னர் அவர்களில் 13 பேர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாவோயிஸ்டுகள் விதித்திருந்த கெடு இன்று மாலை 5 மணியுடன் முடிந்தது. தங்களுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில், மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஒடிசா அரசு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை கெடு முடிவடைந்த நேரத்தில், மாவோயிஸ்டுகள் பத்திரிகையாள� �்களுக்கு அனுப்பிய தகவலில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் விதி நாளை மக்கள் நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
கடத்தப்பட்ட எம்.எல்.ஏ எப்போது மீட்கப்படுவார் என்ற கேள்வியும், மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்று 55 போலீசாரை கொன்ற தீவிரவாதியை ஒடிசா அரசு விடுவித்து விடுமோ என்ற எண்ணமும் ஒடிசாவில் பெரும் எதிர்பார்ப்புக� ��ை ஏற்படுத்தியுள்ளன.
Post a Comment