முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கில் தற்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சசிகலாவிடம் 504 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்காக தனக்கு கூடுதல் ஆவணங்கள் அரசு தரப்பில் தரப்பட வேண்டுமென்று சசிகலா கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வாக்குவாதங்களை கேட்டபின் ஆவணங்களை தர இயலாது என தீர்ப்பளித்து சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்றைய விசாரணைக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆஜரானார்கள் சசிகலா, ஜெயலலிதா சார்பில் புதிய மனு ஒன்று இன்று தாக்கல் செய் யப்பட்டது.
அந்த மனுவில் ஆவணங்கள் படித்து பார்க்கவாவது தங்களுக்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது. அதனால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையும் நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Post a Comment