மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் உருவாக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தின் முதல் பார்வை� ��்கான படங்கள் வெளியாகியுள்ளன.
செல்வராகவன் - யுவன் - அரவிந்த் கிருஷ்ணா கூட்டணியாக இருந்தபோது உருவான ஐடியா இந்தப் படம். இவர்களின் 'ஒயிட் எலிபென்ட்' நிறுவனம் உடைந்து சிதறியதில், இந்தப் படம் உருவாவதும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்.
இந்தப் படத்தின் ஹீரோக்கள் தனுஷ், ராணா, அல்லு அர்ஜூன் என மாறிக்கொண்டே இருந்தார ்கள். கடைசியில் ஆர்யா -அனுஷ்கா என்பது உறுதியானது.
ஆரம்பத்தில் யுவன், பின்னர் ஜீவி பிரகாஷ், மீண்டும் யுவன், இப்போது ஹாரிஸ் ஜெயராஜ்... இசையமைப்பாளர்கள் மாறிய 'ஆர்டர்' இது.
ஒளிப்பதிவு ராம்ஜி. ஷுட்டிங் தொடங்குவதும் நிற்பதுமாக இதோ அதோ என இழுத்தடித்த ஒரு படம்.. இப்போது படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்கிறார்கள்.
ஸ்டில்களைப் பார்த்தால், ஒரு இனிமையான உணர்வு வருகிறது. படம் பார்க்கும்போது அந்த உணர்வு இருந்தால் நன்றாக இருக்கும்!
Post a Comment