நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. 2011-ல் பெண் குழ ந்தை பிறந்தது. குழந்தைக்கு நைனிகா என்று பெயர் சூட்டினார். பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க மீனாவை அணுகினர். அவர் மறுத்து விட்டார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க மீனாவுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திசேகரன் இயக்கி இருந்தார். அது தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. விஜயின் அப்பாவான எஸ்.ஏ. சந்திசேகரன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் கதாநாயகனின் அக்கா வேடத்துக்கு பலரை பரிசீலித்தனர். இறுதியில் மீனா பொருத்தமாக இருப்பார் எ ன்று அழைத்துள்ளனர். இதில் மீனா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment