ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக பைசாபாத் மாவட்ட நீதிபதி ராமவிரகாஷ் யாதவுக்கு மிரட்டல் கடிதம் வந்� �ுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் உள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக அந்த கோவிலுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ராமர் கோவிலையும், மாவட்ட நீதிமன்றத்தையும் வெடிகுண்டு வைத்து தகர்த்தப் போவதாக பைசாபாத் மாவட்ட நீதிபதி ராம்விரகாஷ் யாதவுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.
அந்த கடித்தத்தில் ராமஜென்ம பூமி வளாகத்தையும், மாவட்ட நீதிமன்றத்தையும் குண்டு வைத்து தகர்க்கப்போவதாக யாரோ கையால் எழுதி சாதாரண தபாலில் அனுப்பியுள்ளனர். நீதிபதி யாதவ் அந்த கடித்தத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து ராமர் கோவிலுக்கும், மாவட்ட நீதிமன்றத்திற்கும் பாதுகாப்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து பைசாபாத் டி.ஐ.ஜி. பானுபாஸ்கர் கூறுகையில்,
ராமர் கோவிலைத் தகர்க்கப்போவதாக அடிக்கடி மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. இதுவரை வந்துள்ள எந்த ஒரு கடிதத்தையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்.
கடந்த மாதம் ராமநவமியின்போது ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் கடிதம் வந்தது. இந்த 2 கடிதகங்களையும் எழுதியது ஒரு நபரா என்று அவற்றை ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறோம். முதலில் வந்த கடிதத்தில் அப்துல் கரீம் என்ற பெயர் இருந்தது. � �து மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் இருந்து வந்தது. அந்த கடிதத்தை எழுதிய உண்மையான நபர் இன்னும் சிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
Post a Comment