உலக அரங்கில் 2012-ம் ஆண்டில் அதி� �ாரமிக்க 100 தலைவர்களின் பெயர்களை 'டைம் இதழ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவைச் சேர்ந ்த அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க நாட்டின் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் தொழிலதிபர் வாரன் பப்பெட் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளன.
இந்தப்பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம்பெற்றுள்ளார். மம்தா பானர்ஜி தவிர அட்வோகேட் அஞ்சலி கோபாலன் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு நூலகம், மற்றும் அரசு உதவி பெரும் நூலகங்களில் குறிப்பிட்ட நாளிதழ்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவது மற்றும் முதல்வர் குறித்தான கார்� ��்டூன் வெளியிட்ட பேராசிரியர் கைது போன்ற செயல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் நிலையில் இச்செய்தி வந்துள்ளது குறிபிடத்தக்கது.
மேலும் டைம் இதழ் மம்தா பல ஆண்டுகளாக போராடி தன்னை வலிமைமிக்க அரசியல்வாதியாக உலகிற்கு காட்டியுள்ளார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளது.
கடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இடதுசாரி கட்சியை வீழ்த்தி தனிப்பெரும்பான்யுடன் ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெரும் சவாலாகவும் உள்ளார்.
Post a Comment